மஜத கட்சியின் தலைவர் பதவியில் இருந்து குமாரசாமி விடுவிப்பு

  சுஜாதா   | Last Modified : 06 Aug, 2018 10:56 am

kumaraswamy-from-the-post-of-party-s-state-unit-chief-replacing-him-with-adaguru-h-vishwanath

கர்நாடகம் மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து குமாரசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். 

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக தேவே கவுடா செயல்பட்டு வருகிறார். இதனை தொடர்ந்து அக்கட்சியின் மாநில தலைவராக அவரது மகன் குமாரசாமி செயல்பட்டு வந்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து,  அவரது பணிச்சுமையை குறைக்கும் வகையில் அக்கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து குமாரசாமியை விடுவிக்க தேவே கவுடா  நடவடிக்கை எடுத்துள்ளார்.  
குமாரசாமிக்கு பதிலாக, விஷ்வநாத் என்பவரை மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சித்தராமையாவின் நெருங்கிய நண்பரான விஷ்வநாத், கடந்த மே மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து மதசார்பற்ற ஜனதா தளத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close