ஹிட்லர் உடையில் நாடாளுமன்றம் வந்து வியக்க வைத்த தெலுங்கு தேச எம்.பி!

  Padmapriya   | Last Modified : 09 Aug, 2018 08:15 pm
tdp-mp-turns-up-as-adolf-hitler-in-parliament

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச எம்பி நரமல்லி சிவபிரசாத், ஹிட்லர் போல உடையணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்பி நரமல்லி சிவபிரசாத். இவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் தற்போது நடைபெறும் பருவக்கால கூட்டத்தொடரிலும் பல மாறுவேடங்கள் அணிந்து விநோதமாக போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மாநிலங்களவை தெலுங்கு தேச எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதில் நரமல்லி சிவபிரசாத் மறைந்த ஜெர்மன் சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் போலவே மீசை வைத்து உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றார். இதற்கு முன் நரமல்லி பள்ளி மாணவர், நாரதர், ராமர், மந்திரவாதி மற்றும் சலவை தொழிலாளர் போல பல வேடமிட்டு போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். 

கடந்த 2014ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் இரண்டாக பிரிக்கப்பட்டது. பிரிவினையின்போது ஆந்திரா தரப்பில் பெரும் போராட்டம் எழுந்தது. அப்போது தனி தெலங்கானா அமைத்தப்பின் ஆந்திராவுக்கு வேண்டிய சலுகைகள் அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது.

கூறியபடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என அங்கு ஆளும் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் உள்பட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கக் கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி தந்து வருகிறார். பின், பாஜக கூட்டணியில் இருந்தும் விலகியா தெலுங்கு தேசம், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லை தீர்மானத்தினையும் கொண்டுவந்தது. ஆனால் இந்த தீர்மானத்தில் பா.ஜ.க வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

அதனைத் தொடர்ந்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச எம்பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close