3 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி வேண்டும், பா.ஜ.க வேண்டாம்

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2018 09:52 pm
m-p-rajasthan-chhattisgarh-election-bjp-to-lose-states-but-retain-centre

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டிஸ்கர் மாநில தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.  ஆனால்,  2019 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கே வாக்களிக்க உள்ளதாக பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் வரும்  நவம்பர், டிசம்பர் மாதங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மாநிலங்களிலுமே, மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சி புரிந்து வருகிறது பாரதிய ஜனதா. ஆனால், பொதுமக்கள் மத்தியில் ஆளும்கட்சியின் மேல் அதிருப்தி இருப்பதாக தெரிகிறது. பெரும்பாலான மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புவதாகவும், அதனால், வரும் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெறும் எனவும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த மாதம் ஏ.பி.பி - சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில், 117 இடங்களை காங்கிரஸ் கட்சி வெல்லும் என்றும், ஆளும் பாரதிய ஜனதா 101 இடங்களை மட்டும் பெறும் என்றும் தெரிய வந்துள்ளது. அதேபோல, ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் 130 இடங்களை காங்கிரஸ் வெல்லும் என்றும், 57 இடங்களை மட்டுமே பாரதிய ஜனதா வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டிஸ்கரை பொறுத்தவரை, 90 இடங்களில் 54 தொகுதிகளை காங்கிரஸ் வெல்ல வாய்ப்புள்ளதாம். பாரதிய ஜனதா 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 

சட்டமன்ற தேர்தலில் கருத்துக்கணிப்புகள் இவ்வாறு இருக்க, 2019 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகளோ வேறு கதை. மோடியின் ஆட்சியின் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளதால், 2019 தேர்தலில் இந்த 3 மாநிங்களிலுமே பாரதிய ஜனதா அதிக இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close