வாஜ்பாயின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி!! 

  சுஜாதா   | Last Modified : 17 Aug, 2018 06:56 am
mk-stalin-kanimozhi-pay-tributes-to-ex-pm-atal-bihari-vajpayee

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி இருவரும் அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.கவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உட்பட பல்வேறு கட்சி அமைப்பினர்களும் வந்து மரியாதை செலுத்தி வரும் நிலையில்,  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  கனிமொழி எம்.பி இருவரும் வாஜ்பாய் உடலுக்கு இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, பத்திரிகையாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர் வாஜ்பாய் அவரது மறைவு வருத்தமளிக்கிறது. தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என்ற நிலை வந்த போது அரசியல் சாசனத்தை காத்தவர் வாஜ்பாய். அவரது மறைவினால் நாட்டு மக்கள் அடைந்துள்ள துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன்" என தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close