தந்தையுடன் ஒரே வகுப்பில் கல்லூரியில் பயின்ற ஆச்சர்ய நாயகன் வாஜ்பாய்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 17 Aug, 2018 12:23 pm
vajpayee-with-a-father-in-college-with-the-same-class

பொக்ரான் நாயகன், கார்கில் போர் காவலன், தங்க நாற்கரச்சாலை திட்ட நவயுகன், பாகிஸ்தானுக்கு பேருந்துவிட்ட பெருந்தகைவன், பி.எஸ்.என்.எல் உருவாக்கிய பிதாமகன் என எத்தனையோ சாதனைகளை படைத்திருக்கிறார் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய். 

தனது தந்தையுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து மறக்க இயலாத சம்பவத்தையும் நிகழ்த்தி இருக்கிறார் வாஜ்பாய். இந்த தகவலை வாஜ்பாய் படித்த கான்பூர் கல்லூரியின் தற்போதைய முதல்வர் டாக்டர் அமித் குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாஜ்பாய் படித்த கான்பூர் கல்லூரி

இது குறித்து அவர் ‘வாஜ்பாய் 1945 ஆம் ஆண்டு எங்கள் கல்லூரியில் அரசியல் அறிவியல் பயின்றார். அதனைத்தொடர்ந்து சட்டம் பயின்றார்.  அப்போது அவரது தந்தை கிருஷ்ணா பிஹாரியும், வாஜ்பாயுடன் படித்தார்’ எனக்கூறியிருக்கிறார். வாஜ்பாயும், அவரது தந்தையும் ஒரே வகுப்பில் படித்தது மட்டுமல்ல, படிக்கும் காலத்தில் ஒரே அறையில் தங்கியும் இருந்துள்ளனர். தந்தை, மகன் என இருவரையும் பற்றி கல்லூரி முழுவதும் பேச்சு எழுந்து பரபரப்பாகி உள்ளது. பின்னர் இருவரையும் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றியுள்ளது கல்லூரி நிர்வாகம்.  

கல்லூரி மாணவராக வாஜ்பாய்  ( வட்டத்திற்குள்)

அந்தக் கல்லூரியில் தான் படித்தது குறித்தும், மலரும் நினைவுகள் குறித்தும் தந்தையே நண்பனாகவும், அறை தோழனாக இருந்தது உள்ளிட்ட பலவற்றைப் பற்றி வாஜ்பாய் தன் கைப்பட எழுதிய கடிதம், அந்தக் கல்லூரியில் இருப்பதாக கூறப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close