வாஜ்பாயை குலோப் ஜாமூன் சாப்பிட விடாமல் தடுத்த மாதுரி தீக்‌ஷித் - ஏன் தெரியுமா?

  திஷா   | Last Modified : 18 Aug, 2018 05:41 am

memories-of-atal-bihari-vajpayee

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு உணவு பிரியர். ஒரு முறை அவரது அஃபிஷியல் லஞ்சில் தட்டு நிறைய குலோப் ஜாமூன் வைக்கப் பட்டது. ஆனால் வாய்பாயின் உடல்நிலைப்படி அவர் அதை சாப்பிடக் கூடாது. அப்போது நடிகையும், விருந்தாளியுமான மாதுரி தீக்‌ஷித்தின் உதவியோடு சாமர்த்தியமாக அந்தத் தருணத்தை கையாண்டனர் அதிகாரிகள். 

வாஜ்பாய்க்கு இனிப்பும், கடல் உணவும் அவ்வளவு பிரியமாம். அதுவும் இறால் என்றால் சொல்லவே வேண்டாம்!
அந்த அஃபிஷியல் லஞ்சில் உணவு கன்டருக்கு செல்கிறார் வாஜ்பாய், அவர் அதிகப்படியாக எதையும் சாப்பிட்டு விடக் கூடாது என அவரது உடலில் அக்கரையாக இருந்த அதிகாரிகள், உடனடியாக மாதுரியை வாஜ்பாய்க்கு அறிமுகப் படுத்துகிறார்கள். சாப்பாட்டிலிருந்து கவனம் சிதறி மாதுரியிடம் பேசுகிறார் வாஜ்பாய். பிறகு இரண்டு சினிமா ஆர்வலர்களும் படங்களைப் பற்றி பேச, எப்படியோ அவரின் டயட்டை காப்பாற்றி விட்டோம் என நிம்மதி பெரும் மூச்சு விடுகிறார்கள் அங்கிருந்த அதிகாரிகள். 

அவர் வெளியூர்களுக்கு செல்லும் போதெல்லாம் அங்குக் கிடைக்கும் உள்ளூர் உணவுகளை விரும்பி சாப்பிடுவார் என்கிறார் வாஜ்பாயுடன் பணி புரிந்த அதிகாரி ஒருவர். 

கொல்கத்தாவில் புச்காஸ், ஹைதராபாத்தில் பிரியாணி மற்றும் ஹலீம், லக்னோவில் கலோட்டி கபாப் என இவரின் பட்டியல் நீளும். 

'அமைச்சரவை சந்திப்புகளில் நிச்சயம் உப்பு வேர்க்கடலையுடன் தான் வாஜ்பாய் இருப்பார். அதுவும் எப்போதும் தட்டு நிரம்பியே இருக்க வேண்டும் எனவும் ஆசைப் படுவார்' என்கிறார் அவருக்கு நெருக்கமான ஒருவர். 

பா.ஜ.க தலைவர்கள் லால்ஜி டாண்டன், லக்னோவிலிருந்து கபாப்பும்,  மத்திய அமைச்சர் விஜய் கோயெல் பழைய தில்லியிலிருந்து பெட்மி ஆலு மற்றும் சாட்டும், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு ஆந்திராவில் இருந்து இறாலும் கொண்டு வந்து கொடுப்பார்கள், என்கிறார் நெருங்கிய உதவியாளர் ஒருவர். 

மேலும் செய்திகளுக்கு - www.newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.