ராகுல் காந்திக்கு எச்சரிக்கை... நோட்டீஸ் அனுப்பிய அனில் அம்பானி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Aug, 2018 05:01 pm
anil-ambani-issues-notice-to-rahul-gandhi-on-rafale-issue

ரஃபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில், ரிலையன்ஸ் குழுமம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தவறான தகவல் அளிப்பதை  நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருக்கு அனில் அம்பானி சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. இதன் மூலம் அனில் அம்பானிக்கு ரூ.45 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறிவருகிறார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது தொடர்பாக மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான திட்டத்தை தயாரிக்க 6 பேர் கொண்ட பணிக்குழு ஒன்றையும் ராகுல் அமைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த குழுவில் இடம்பெற்றுள்ளவர்களில் ஒருவரும் காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளருமான ஜெய்வீர் ஷெர்கிலுக்கு அனில் அம்பானியின் சார்பில் அவரது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், “இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற மற்றும் பிரபலமான நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமம் உள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 3.50 லட்சம் கோடியாகும். 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசியல் கட்சி என்ற வகையில், ரஃபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட தேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் எழுப்ப உங்களக்கு உரிமை உள்ளது.

பொதுநல காவலர்கள் என்ற வகையில், தீவிர விசாரித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அறிக்கையாக வெளியிடும் பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, அசோக் சவான், சஞ்சய் நிருபம், உம்மன் சாண்டி, அபிசேஷ் மனு சிங்வி உட்பட பல தலைவர்கள் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸுக்கு எதிராகத் தவறான, ஆதாரமில்லாத, அவதூறான குற்றச்சாட்டுகளை ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகள் தவறானது என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு மக்களின் மனதில் ரிலையன்ஸ் குழுமம் மீது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். எனவே தவறான குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கக்கூடாது” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ராகுலுக்கு, அனில் அம்பானி ஏற்கெனவே கடிதம் எழுதி இருந்தார். அதில் ‘’ரபேல் ஒப்பந்த விவகாரத்தில்,ராகுல் தொடர்ந்து தவறான தகவல்களையே அளித்து வருகிறார். இதன்மூலம், அவரை சில பன்னாட்டு நிறுவனங்கள் அவரை தவறான பாதைக்கு வழிநடத்தி செல்வது புலனாகிறது’’ என அவர் கூறியிருந்தார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close