கேரளாவிற்கு சாம்சங்  ரூ.1.5 கோடி, ஹோண்டா ரூ.3 கோடி நிதியுதவி 

  சுஜாதா   | Last Modified : 24 Aug, 2018 08:38 am
samsung-to-contributes-rs-1-5cr-honda-donates-rs3-cr-to-flood-hit-kerala

கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினை தொடர்ந்து, பல்வேறு அமைப்பினரும்   கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.   

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு சாம்சங் இந்தியா நிறுவனத்தின் சார்பாக ரூ.1.5 கோடிக்கான காசோலையை அந்நிறுவனத்தின் பிரதிநிதி கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். மேலும் முகாம்களில் உள்ளவர்களுக்கு 10,000 படுக்கைகளை வழங்கியுள்ளனர். 

இதனை தொடர்ந்து, ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவிற்கு நிதியுதவியாக ரூ.3 கோடிக்கான காசோலையை பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அதானி அறக்கட்டளை சார்பாக ரூ.50 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close