பசுக்களைக் கொன்றதால்தான் கேரளாவில் வெள்ளம் - பா.ஜ.க எம்.எல்.ஏ சொல்கிறார்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 27 Aug, 2018 10:16 am
kerala-floods-due-to-slaughtering-of-cows-says-bjp-mla

கேரளாவில் பசுக்களைக் கொன்றதால்தான் மிகப்பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று அவ்வப்போது தன்னுடைய பேச்சால் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ பசன கவுடா பாட்டீல் தெரிவித்துள்ளார். 

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைச் சொல்வதன் மூலம் மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்படுபவர் கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ பசன கவுடா பாட்டீல். சில மாதங்களுக்கு முன்பு, எனக்கு இஸ்லாமியர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இந்துக்கள் மட்டும்தான் வாக்களித்தார்கள். எனவே, எம்.எல்.ஏ உதவிகள் அனைத்தும் இந்துக்களுக்கு மட்டும்தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்த நிலையில் கேரள வெள்ளப் பெருக்கு பற்றி அவர் தற்போது பேசியுள்ளார். கர்நாடகாவின் விஜயபுராவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பசன கவுடா பின்னர் நிருபர்களிடம் பேசினார். அப்போது, "கேரளாவில் வெளிப்படையாகவே பசுக்கள் கொல்லப்படுகின்றன. இதனால் என்ன நடந்தது? ஒரே ஆண்டில் மிக மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் யாராக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை அனுபவித்தே தீர வேண்டும்" என்றார். 

மேற்கு கடலோர பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு மழைப் பொழிவு இருந்தது. இதனால், கேரளா, கர்நாடகாவின் குடகு மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. உலகின் பல பகுதிகளில் இருந்து உதவிகள் வந்துகொண்டிருக்கின்றன. மக்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுகொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில், பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close