மூன்றாவது கூட்டணிக்கு தாவல்... தப்புமா குமாரசாமி அரசு..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Sep, 2018 06:37 am
chandrababu-naidu-hd-kumaraswamy-meet-in-vijayawada

2019ம் ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி பாஜக, காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்துப் பேசினார். 

பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் திட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். மாற்றுக்கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் அவர்கள் பல்வேறு மாநிலத் தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
அதேபோல், காங்கிரஸ் தயவில் கர்நாடக முதல்வராக இருந்து வரும் குமாரசாமியை இன்று விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு சந்தித்துப்பேசினார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக புதிய கூட்டணி அமைப்பது குறித்து இருவரும் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு பேசிய சந்திரபாபு நாயுடு, நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக மாநிலக்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசித்தோம். இந்தச் சந்திப்பு சிறிது நேரம் மட்டுமே நடந்தது. இதுகுறித்து இனி வரும் நாட்களில் விரிவாகச் சந்தித்துப்பேச இருக்கிறோம். அத்தோடு நாங்கள் மற்ற கட்சியினருடனும், இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ எனத் தெரிவித்தார். 
இதுகுறித்து குமாரசாமி பேசுகையில், “நாங்கள் இருவரும் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறோம். சமீபத்தில் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப்பேசினோம். இருவரும் பல விஷயங்கள் குறித்து விவாதித்து இருக்கிறோம். இப்போது மக்களவை தேர்தலில் போட்டியிடும் திட்டங்கள் குறித்துப் பேசினோம்’ எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து தெலுங்குதேசம் கட்சியினர், ‘’ தேர்தலுக்காகக் காத்திருக்கிறோம். பல மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து தற்போதைய இந்தியாவின் நிலையை மாற்றிக் காட்டும் திட்டத்தில் இருக்கிறோம்’’ என்கின்றனர். தற்போது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் மும்முனைப்போட்டி நிலவியது. இதில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி 80 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது.

மிகக்குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமியை முதல்வராக்கியது காங்கிரஸ் கட்சி. நேற்றுடன் முதல்வராகி நூறாவது நாளைக் கடந்திருக்கிறார் குமாரசாமி. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் குமாரசாமி காங்கிரஸுடன் கூட்டணி சேராமல் மூன்றாவதாக அமையப்போகும் கூட்டணியில் இணைந்தால் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொள்ள முயலும். அப்படி நேர்ந்தால் குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு கவிழ வாய்ப்பு ஏற்படும். ஆகையால், தான் இன்று நடந்த சந்திப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக மூன்றாவது கூட்டணியை அமைக்க உள்ளோம்’ என காங்கிரஸ் பற்றிப் பேசாமல் தவிர்த்துள்ளார் சந்திரபாபு நாயுடு. 

ஒருவேளை தேர்தலுக்கு பிறகு தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால் மூன்றாவது கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரும் நிலை ஏற்படலாம். அப்படி வாய்த்தால் குமாரசாமி ஆட்சி நீடிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது கூட்டணிக்கு குமாரசாமி ஆதரவு தருவாரா? என்பது சந்தேகமே என்கிறார்கள். 

கிளை முக்கியமா..? இலை முக்கியமா..? என்பதை அறியாதவரா குமாரசாமி!

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close