'தூய்மையே உண்மையான சேவை' திட்டம்: பிரதமர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2018 08:50 am

pm-gives-a-clarion-call-to-everyone-to-become-a-part-of-swachhata-hi-seva-movement

‘தூய்மையே உண்மையான சேவை இயக்கத்தின்’ பகுதியாக ஒவ்வொருவரும்  மாறவேண்டும் என்று பிரதமர்  திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

“ வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு  தொடங்குகிறது. தூய்மை இந்தியா  என்கிற காந்தியின் கனவை நனவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் இயக்கமான  தூய்மை இந்தியா  இயக்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு நாளாகவும் அது அமைந்திருக்கிறது.

தூய்மை இந்தியாவுக்காக பாடுபட்ட அனைவரையும் நான் வணங்குகிறேன்.

'தூய்மையே உண்மையான சேவை இயக்கம்’  வரும் 15-ம்  தேதி தொடங்குகிறது. இது காந்தி அவர்களுக்கு  நாம் செலுத்தும்  மகத்தான அஞ்சலியாகும்.

தூய்மை இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளை வலுப்படுத்தவும், இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் இருக்க முன்வாருங்கள்.

'தூய்மையே உண்மையான சேவை இயக்கத்தின்’ தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 15-ம்  தேதி காலை 9.30 மணிக்கு நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். தூய்மைக்கான  செயல்பாடுகள், தொடங்கியபின், தூய்மை இந்தியா இயக்கம் வலுப்பட மிகுந்த ஈடுபாட்டுடன் களப்பணியாற்றியவர்களுடன், கலந்துரையாடும் தருணத்தை நான் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன்” இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close