கவுரமிக்க டெல்லி பல்கலை.தேர்தலில் வெற்றியை சுவைத்த பாஜக மாணவர் அணி

  பா.பாரதி   | Last Modified : 15 Sep, 2018 04:46 am
bjp-students-sweep-delhi-university-student-elections

இந்தியாவில் உள்ள பல்கலைகழகங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, டெல்லி பல்கலைகழகம். இங்கு நடக்கும் மாணவர் சங்க தேர்தல் –அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய  கவுரவ பிரச்சினை. அரசியல் ரீதியாகவே இங்கு தேர்தல் நடைபெறும். அரசியல் கட்சி தலைவர்களுக்கு சற்றும் குறையாமல், மாணவர் சங்க  தலைவர்களின் பிரச்சாரத்தில் அனல்  பறக்கும்.

இந்த ஆண்டுக்கான டெல்லி பல்கலைகழக மாணவர் சங்க தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய  கடந்த புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது.

பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துக்கும் (ஏ.பி.வி.பி), காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்துக்கும் (என்.எஸ்.யு.ஐ) இடையே பிரதான போட்டி நிலவியது. எம்.பி., எம்.எல்.ஏ.வை தேர்வு செய்வதற்கு நடப்பது போலவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடந்தது.

சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஓட்டு எண்ணிக்கையின் போது சிறு சிறு வாக்கு வாதங்களும் நடைபெறாமல் இல்லை. தேர்தல் முடிவு செப்.13 ஆம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது. 

தலைவர், துணைத்தலைவர், மற்றும் இணைச்செயலாளர் பதவிகளை ஏபிவிபி கைப்பற்றியது. ஆறுதல் பரிசாக செயலாளர் பதவியை மட்டுமே காங்கிரஸ் மாணவர்களால் பெற முடிந்தது.

பொதுவாக மாணவர் சங்க தேர்தல்களில் இடதுசாரி மாணவர்களே வெற்றி பெறுவார்கள். பாரம்பரியம் மிக்க டெல்லி பல்கலைகழக யூனியனை பாஜக ஆதரவு  மாணவர்கள் கைப்பற்றி இருப்பது அந்த கட்சி தலைவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close