செர்பியா, மால்டா மற்றும் ரொமானியா நாடுகளுக்கு குடியரசுத் துணைத் தலைவர் பயணம்

  சுஜாதா   | Last Modified : 15 Sep, 2018 08:31 am

vice-president-embarks-on-three-nation-visit-to-serbia-malta-and-romania

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அரசு முறை பயணமாக செர்பியா, மால்டா, ரொமானியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

செப்டம்பர் 14 முதல் 21 வரை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, செர்பியா, மால்டா, ரொமானியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  மூன்று நாடுகளின் மாநிலங்களவை தலைவர்களுடன் குடியரசுத் துணைத் தலைவர் கலந்துரையாடுவார். அவரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படும்.  மாநிலங்களவைத் தலைவரான  வெங்கையா நாயுடு, பிற நாடுகளின் மாநிலங்களவைத் தலைவர்களுடன் பிரமுகர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவதுடன், நாடாளுமன்றங்களிலும் உரையாற்றவுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவரின் இந்தப் பயணத்தின் மூலம், மூன்று நாடுகளுடனான இருதரப்பு உறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தப் பயணம் பொருளாதாரம், சுற்றுச்சூழல், வர்த்தகம், கலாச்சாரம் ஆகிய துறைகள் தொடர்பான தகவல்களையும், நிபுணர்களையும் இருநாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close