பாஜக வேட்பாளர்களாக மோகன்லால், அக்ஷய்குமார்!

  பா.பாரதி   | Last Modified : 17 Sep, 2018 05:58 am

70-celebrities-including-mohanlal-and-akshay-kumar-to-run-for-bjp

சினிமா நடிகர்களை தேர்தல் களத்தில் நிறுத்தும் கலாச்சாரத்தை தமிழகத்தில் திராவிட கட்சிகள் தொடங்கி வைத்து-இந்தியாவுக்கே முன் மாதிரியாக விளங்கியது என்பது முற்றிலும் உண்மை. எஸ்.எஸ்,ஆர்,எம்.ஜி.ஆரில் ஆரம்பித்த இந்த வழக்கம் இன்று பரிணாம வளர்ச்சி பெற்று சந்திரசேகர், கருணாஸ் என நீள்கிறது. கவர்ச்சி முகங்கள் –கட்சியின் வெற்றிக்கு அவசியம் என கருதி, காங்கிரஸ் ,பாஜக போன்ற கட்சிகளும் வைஜெயந்திமாலா, அம்பரீஷ்,சத்ருகன் சின்ஹா,வினோத்கன்னா போன்ற சினிமா பிரபலங்களை தேர்தல் களத்தில் நிற்க வைத்து வெற்றியை சுவைத்தன.

பாஜக மேலிடம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒரு படி மேலே போய்- சினிமா ஆட்கள் தவிர- விளையாட்டு,கலை,மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் முத்திரை பதித்த ஜாம்பவான்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டே இதனை முடிவு செய்த பிரதமர் மோடி,ஒவ்வொரு எம்.பி.தொகுதியிலும் உள்ள பிரபலங்கள் பட்டியலை தயார் செய்து அனுப்ப மாநில தலைமைகளுக்கு பணித்தார். அவர்கள் அனுப்பிய ‘லிஸ்டை’ பரிசீலித்த பாஜக மேலிடம், 70 பிரபலங்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம் தொகுதியில் நடிகர் மோகன்லால் போட்டியிடுகிறார். அவர் சில தினங்களுக்கு முன்னர் மோடியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

நடிகை மாதுரி தீட்சித் மும்பை தொகுதியில் நிறுத்தப்படுகிறார். அக்ஷய் குமார் ,கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 70 பிரபலங்களுக்கு வழி விடும் வகையில், ஏற்கனவே எம்.பி.யாக உள்ள பாஜகவினர்,தங்கள் தொகுதியை கை விட நேரிடும்.அவர்களுக்கு மேல்சபை எம்.பி.பதவி அளிக்கப்படும். தமிழகத்தில் பேர் சொல்லும் படியாக சினிமா பிரபலங்கள் இல்லாததால்,மருத்துவம் உள்ளிட்ட வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களுக்கு எம்.பி.சீட் கொடுக்கப்படும் என தெரிகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close