மகனுக்கு முதல்வர் நாற்காலி; சந்திரசேகர் ராவ் திட்டம்...

  பா.பாரதி   | Last Modified : 17 Sep, 2018 05:59 am

chandrasekar-rao-plans-to-seat-his-son-as-cm

தங்கள் வாரிசுகளை, தாங்கள் பூரண உடல் நலத்துடன் இருக்கும் போதே கட்சி தலைவர், முதல்வர் போன்ற உயர்ந்த பதவிகளில் அமர வைப்பது அரசியல் கட்சி தலைவர்களின் வழக்கம். இங்கே கருணாநிதி தொடங்கி வடக்கே பரூக் அப்துல்லா, முப்தி முகமது சயீத், முலாயம் சிங், லல்லு பிரசாத் யாதவ், சரண்சிங், தேவிலால் போன்றோரை உதாரண புருஷர்களாக சொல்லலாம். அதே வழியில் பயணிக்கிறார்- தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்.

தெலுங்கானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் தான் முடிகிறது .தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் சட்டப்பேரவையை கலைத்து விட்டார், சந்திரசேகர் ராவ்.மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தினால் பாஜக ஆதாயம் பெற்று விடும் என்று அவர் கருதியது முதல் காரணம். தான் முழு ஆரோக்கியமாக இருக்கும் போதே தன் மகன் கே.டி.ராமராவை முதல்வர் நாற்காலியில் அமர்த்திவிட வேண்டும் என்பது இரண்டாவது காரணம்.ராமராவ் இப்போது மாநில அமைச்சராக இருக்கிறார்.தகவல் தொழில் நுட்பம், நகரசபை நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, ஜவுளித்துறை உள்ளிட்ட பல இலாகாக்கள் அவர் வசம் உள்ளன. பக்கத்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் , மாநில அமைச்சராக உள்ளார்.நாயுடுவுக்கு பிறகு அவரே முதல்வர் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், லோகேஷுக்கு முன்பாக தன் மகனை முதல்வர் ஆக்கிவிட வேண்டும் என்பதே சந்திரசேகர் ராவின் லட்சியம்.

இதனை வன்மையாக கண்டித்துள்ளார் பாஜக தலைவர் அமீத்ஷா.ஐதராபாத்தில் பேட்டி அளித்த அவர், "ஒரே தேசம்..ஒரே தேர்தல்’என்கிற பாஜகவின் திட்டத்தை ஆதரித்த சந்திரசேகர் ராவ், தன் மகனை முதல்வர் ஆக்குவதற்காக 9 மாதங்களுக்கு முன்னரே பேரவையை கலைத்து மாநிலத்துக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி விட்டார்’ என்று வசை பாடியுள்ளார்.

‘’தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடும்’’ என்றும் அமீத்ஷா அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், பாஜகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அமீத்ஷாவின் அதிரடி அறிவிப்பு அங்கு புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close