ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #HappyBdayPMModi  ஹேஷ்டேக்!!

  சுஜாதா   | Last Modified : 17 Sep, 2018 08:47 am

trends-on-twitter-happybdaypmmodi-hashtag

இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால், ட்விட்டரில்   #HappyBdayPMModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. 

 பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள வாழ்த்து செய்தியானது, "பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களுக்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற நீண்ட நாட்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துவதாக" தெரிவித்துள்ளார். 

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ளவாழ்த்து செய்தியானது, "இந்தியாவின் ஆற்றல் மிக்க, ஒப்பற்ற பிரதமரான மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

பல்வேறு பிரபலங்களும், மக்களும் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், ட்விட்டரில்   #HappyBdayPMModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. 

பிரதமர் மோடி தனது பிறந்த நாளை முன்னிட்டு வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close