அடம் பிடிக்கும் மாயாவதி; நிம்மதி இழந்த அகிலேஷ் யாதவ்!

  பா.பாரதி   | Last Modified : 17 Sep, 2018 10:09 pm

akilesh-yadav-gets-into-trouble-as-mayavathi-demands-more-number-of-seats

நாட்டிலேயே அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உ.பி. இங்கு எந்த கட்சி அதிக இடங்களை பிடிக்கிறதோ அந்த கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது பொதுவான அனுமானம்.
அங்கு கடந்த முறை நடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை அள்ளியது பாஜக கூட்டணி.

கடந்த தேர்தலில்  அந்த மாநிலத்தில்  மாயாவதியின் பி.எஸ்.பி. ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. ஆனாலும் பலமான அடித்தளம் உண்டு. சில மாதங்களுக்கு முன்னர், உ.பி முதல்வர் மற்றும் துணை முதல்வர் ராஜினாமா செய்ததால் நடந்த 2 தொகுதி இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி  கட்சியும், பி.எஸ்.பியும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தன. பா.ஜ.க தோல்வியை தழுவி, கட்சி மேலிடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மாயாவதி –அகிலேஷ் கூட்டணி வரும் மக்களவை தேர்தலிலும் தொடர்ந்தால் உ.பியில் பா.ஜ.கவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையில் மாயாவதி வழக்கம் போல் அடம் பிடிக்க ஆரம்பித்துள்ளார். லக்னோவில் மாயாவதி புது வீடு கட்டியுள்ளார். அங்கு நேற்று  பால் காய்ச்சி குடியேறிய அவர், அகிலேஷுக்கு காய்ச்சலை எற்படுத்தி  உள்ளார். "மக்களவை தேர்தலில் எங்கள் கட்சிக்கு (அகிலேஷ்) கணிசமான தொகுதிகளை ஒதுக்காவிட்டால் தனித்து போட்டியிடுவேன்’’ என்று அறிவித்து அகில இந்திய அளவில் பா.ஜ.கவுக்கு எதிரான  கூட்டணி முயற்சியை  ஆட்டம் காணச்செய்துள்ளார்.

அப்பாவுடன்  பனிப்போர், சித்தப்பாவுடன் நேரடிப்போர் என தடுமாறிக்கொண்டிருக்கும் அகிலேஷுக்கு மாயாவதியின்  அதிரடி புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் உ.பி அரசியலை அறிந்தவர்களோ "மாயாவதி எப்போதுமே இப்படித்தான். கடந்த தேர்தலில்  ‘பூஜ்யம்’ வாங்கிய அவர், கடைசி நேரத்தில் கொடுத்த தொகுதிகளை பெற்றுக்கொண்டு சமாதானமாகி விடுவார்’’ என்கிறார்கள். 

ஆனால் இம்முறை என்ன நடக்குமோ என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close