குடியரசுத் தலைவருடன் அரசுப் பணி பயிற்சி அலுவலர்கள் சந்திப்பு

  சுஜாதா   | Last Modified : 18 Sep, 2018 05:29 am

officer-trainees-of-indian-audit-and-accounts-service-indian-trade-service-and-indian-information-service-call-on-the-president

இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் சேவை (Indian Audit and Accounts Service), இந்திய வர்த்தக சேவை (Indian Trade Service), இந்திய தகவல் சேவை (Indian Information Service) ஆகியவற்றின் பயிற்சி அலுவலர்கள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்தை தனித்தனியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று  (செப்டம்பர் 17) சந்தித்தனர்.

அப்போது, பயிற்சி அலுவலர்களிடையே குடியரசுத் தலைவர் பேசியதாவது:

“கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் சேவை அலுவலர்கள் நாட்டின் சட்டமன்ற, நாடாளுமன்றத்தின் பொறுப்புடைமையில் மிக முக்கியப் பங்கினை வகிக்கிறார்கள். சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை சட்டமன்றத்தின் பொறுப்புடைமையில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் சேவை அதிகாரிகள்தான் மக்கள் நம்பிக்கை மற்றும் மக்களின் நம்பிக்கைக்கும் நிதி விவகாரம் ஆகியவற்றின் காப்பாளர்கள் ஆவர்.

இன்றைய உலகமயமாக்கல் அமைந்த உலகத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வைத்தே அதன் வலிமை எடைபோடப்படுகிறது. உலகளாவிய சந்தையிலும் வர்த்தகத்திலும் நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வருகின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் நமது வர்த்தகம் வர்த்தகத்தை மேம்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது. வரலாற்று ரீதியில் இந்தியாவுக்கு உலக வர்த்தகத்தில் இந்தியாவுக்கு கணிசமான பங்கு இருந்து வருகிறது. இன்றைக்கு உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 2 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் உலக வர்த்தகத்தில் நம் நாடு குறிப்பிட்ட இடத்தை வகிப்பதில் இந்திய வர்த்தக சேவை அலுவலர்கள் முக்கியமான பங்கு இருக்கிறது.

இது தகவல் சார்ந்த யுகம் என்றாலும், நம் நாட்டில் மக்களுக்குப் பலன் தரும் வகையில் அரசு கொண்டுவரும் பல திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து ஒருசில பிரிவினருக்குப் போதிய விழிப்பு இல்லை. நாட்டின் மூலை முடுக்குகளிலும் எட்டாத கிராமங்களையும் இத்தகைய நலத் திட்டங்களும் திட்டங்களும் குறித்த தகவல்கள் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்நிலையில், அரசாங்கத்தின் சேவைகள், தகவல்கள் பொருத்தமாகவும், உரிய நேரத்திலும் மிக ஆக்கப்பூர்வமாகவும் அவர்களைச் சென்றடைவதில் இந்திய தகவல் சேவை அலுவலர்கள் முக்கிய பங்கினைச் செயல்படுத்தவேண்டும்”

இவ்வாறு குடியரசுத் தலைவர் பேசினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close