வேளாண்மை மற்றும் வேளாண் சார் துறைகளில் இந்தியா மற்றும் எகிப்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 

  சுஜாதா   | Last Modified : 18 Sep, 2018 06:00 am

cabinet-approves-mou-between-india-and-egypt-on-cooperation-in-the-field-of-agriculture-allied-sectors

வேளாண்மை மற்றும் வேளாண் சார் துறைகளில் இந்தியா மற்றும் எகிப்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த கீழ்கண்ட துறைகளில் ஒத்துழைப்பை அளிக்க உதவும்.

* வேளாண் பயிர்கள் (குறிப்பாக கோதுமை மற்றும் சோளம்), உயிரி தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், மழை நீர் சேகரிப்பு மற்றும் நுண் பாசன தொழில்நுட்பம் உள்ளிட்ட நீர்ப்பாசனம் மற்றும் நீர் மேலாண்மை தொழில்நுட்பம் எரிபொருள் 
உற்பத்திக்கான விவசாய கழிவுப்பொருள் மேலாண்மை
* உணவு பாதுகாப்பு, மற்றும் தரம் 
* தோட்டக்கலை 
* இயற்கை வேளாண்மை 
* கால்நடை, கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளர்ப்பு, உணவு மற்றும் தீவன உற்பத்தி 
* விலங்கு பொருட்கள் மற்றும் அதன் மதிப்பு கூட்டல்  பயிர்கள் மற்றும் விலங்கு பொருட்கள் வர்த்தகம் தொடர்பான சுகாதாரம் மற்றும் பயிர் சுகாதார பிரச்சனைகள் 
* சிறிய அளவில் விவசாய இயந்திரங்கள் 
* வேளாண் வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதல் 
* அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நடைமுறைகள் 
* உணவு தொழில்நுட்பம் மற்றும் பதனிடுதல் 
* வேளாண்மையில் ஒருங்கிணைந்த பூச்சி ஒழிப்பு மேலாண்மை
* வேளாண் வர்த்தகம் மற்றும் முதலீடு 
* அறிவுசார் சொத்து உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் 
* விதை சார் தொழில்களில் தொழில்நுட்ப அறிவும் மனித வளங்களும் 
* வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டுள்ள வேளாண்மை தொடர்பான விருப்பமுள்ள துறைகளிலும் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு.
* ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் பரிமாற்றம் மூலமான ஒத்துழைப்பு
* வேளாண் தகவல்கள் மற்றும் அறிவியல் வெளியீடுகளின் பரிமாற்றம் (வேளாண் மற்றும் அதன் துறைகளில் பத்திரிகைகள், புத்தகங்கள், கையேடுகள், புள்ளிவிவர தகவல்கள்) மற்றும் வேளாண் தொழில்நுட்ப பரிமாற்றம்
* கூட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகள், மாநாடுகள் மற்றும் இது சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இருத்தரப்பு உறவு தொடர்பான பிரச்சனைகள் குறித்த ஆலோசனை உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் உள்ளவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த கூட்டு பணிக்குழு அமைக்கப்படும். இந்த கூட்டு பணிக்குழு முதல் இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு இருமுறையாவது இந்தியா மற்றும் எகிப்தில் சந்திக்கும். கூட்டு பணிகளை உருவாக்கல், குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பாக கூடுதல் துணை ஒப்பந்தங்கள் உள்ளிட்ட வசதி மற்றும் ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close