விரைவில் கர்நாடகாவில் பாஜக அரசு..? எடியூரப்பாவை சிம்மாசனத்தில் அமர்த்துமா சாதி..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 19 Sep, 2018 02:05 am

bjp-government-in-karnataka

கர்நாடகாவில் மைனாரிட்டி அரசாங்கத்தை நடத்தி நடத்தி வரும் ஜனதா தள ஆட்சி விரைவில் கவிழும் என பாஜக நம்பிக்கையுடன் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

கர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு வாய்ப்பு இருந்தபோதும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மிகக் குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் லிங்காயத் மற்றும் வட கர்நாடகாவுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது குற்றம்சாட்டப்படுகிறது. லிங்கத் சமுதாயத்தினர் கர்நாடகாவில் 17 சதவிகிதம்பேர் வசித்து வருகின்றனர். 222 தொகுதிகளைக் கொண்ட அங்கு 100 தொகுதிகளுக்கு மேல் லிங்காயத் சமூகத்தினரே வெற்றிகளை நிர்ணயிக்கக்கூடியவர்களாக உள்ளனர். 

லிங்காயத் சமூகத்தினர் அதிகம் வாழும் பெலகவி கர்நாடகாவின் 2வது தலைநகரமாக உருவாக்கப்படும் என குமாரசாமி அறிவித்து இருந்தார். ஆனால், இதுவரை அது வெறும் அறிக்கையாகவே இருந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினர் அவமதிக்கப்படுவதாகவும், அரசியல் ரீதியாக நசுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளும் கூட்டணியில் உள்ள லிங்காயத் சமுதாய எம்.எல்.ஏக்கள் இது குறித்து பாஜக தலைவர்களைச் சந்தித்து குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது. பாஜக முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கிய எடியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். 

அத்தோடு அரசாங்கத்தின் அனைத்தையும் தேவ கவுடா குடும்பத்தினர் கட்டுப்படுத்துவதால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் கடும் கோபத்தில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. தேவகவுடாவின் இன்னொரு மகன் ஹெ.ச்.டி ரேவண்ணா அனைத்துத் துறை விவகாரங்களிலும் முக்கை நுழைப்பது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். அரசு பணியாளர்கள் இடமாற்றம், பணிநியமனங்களில் கீழ் மட்டங்கள் வரை ரேவண்ணா தலையிடுவதாக மாவட்ட மக்கள் நல அலுவலர்கள், தாசில்தார், பதிவு அலுவலர்கள் வரை குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தப் புகார் பட்டியல் தொடர்ந்து வருவதாக் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் குமாரசாமி மீது அதிருப்தியில் உள்ளனர்.

இந்த விவகாரத்தில் மறைமுகமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜார்கிகோலி, மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ -டி.கே. ஷிவகுமாரும் பாஜக ஆட்சியமைக்க உதவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், விரைவில் கர்நாடகாவில் குமாரசாமி களையும் என பாஜக எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்கிறார்கள். எடியூர்ப்பாவின் லிங்காயத் சமுதாய எம்.எல்.ஏக்களும், குமாரசாமியின் எதிர்ப்பு அரசியலும் பாஜகவை விரைவில் கர்நாடகாவை ஆளும் கட்சியாக்கி விடும் என்கிறார்கள்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close