கேரள வெள்ளத்திற்கு வெளிநாட்டில் நிதி... சசிதரூர் நடவடிக்கை அம்பலம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 18 Sep, 2018 08:19 pm

kerala-floods-abroad-collect-money-shashi-tharoor-secret-operation

திருவனந்தபுரம் தொகுதி, எம்.பி.,யும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான, சசி தரூரின் ரகசியம் வெளிப்பட்டதால் எதிர்ப்புக்காட்ட தயாராகி வருகின்றனர் கேரள மாநில மக்கள். 

கேரளாவில், சமீபத்தில் பெய்த பெரும் மழையால், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஒட்டுமொத்த கேரளாவும் வெள்ளத்தில் மிதந்தது.இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனி நபர்களும், தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வருகின்றனர். இதனால், கேரளம் மெல்ல மீண்டு வருகிறது. 

ஆனால், கேரளாவைச் சேர்ந்தவரும், அந்த மாநில, எம்.பி.,யுமான, சசி தரூர் இதுகுறித்து வாயே திறக்கவில்லை. வெள்ளத்தில் கேரளம் மூழ்கியிருந்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், சசிதரூர் வெளிநாட்டுக்கு, காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டப் போய் விட்டதாக தகவல் வெளியானது. இது கேரள மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. உடனே மறுத்த, சசி தரூர், 'கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஐ.நா.,வில் நிவாரண நிதி கேட்பதற்காகவே, வெளிநாடு சென்றேன்' என விளக்கம் அளித்தார்.

ஆனால், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான, பினராயி விஜயனும், மத்திய அரசும், '’சசி தரூர், கேரள வெள்ள பாதிப்பு விஷயமாக வெளிநாடு சென்றதாக, எங்களுக்கு எந்த தகவலும் இல்லை' என, அவரது பயண ரகசியத்தை வெளிப்படையாக அறிவித்தனர். அதன்பிறகு மெளனமாகி விட்டார் சசிதரூர்.

எப்படியும் தொகுதி பக்கம் தலைகாட்டித்தானே ஆகவேண்டும். வரட்டும் என கேரள மக்கள் சசிதரூர் வரவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். கவனிப்பு பலமாகவே இருக்கும் என்கிறார்கள்.   

Newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close