முதலீடுகளுக்கு பாதுகாப்பான இடம் இந்தியா: இந்தியா – மால்டா வர்த்தக அமைப்பில் வெங்கையா நாயுடு  உரை!

  சுஜாதா   | Last Modified : 19 Sep, 2018 11:09 am

ambitious-transformative-vision-make-india-a-safe-destination-for-investments-vice-president

மிகப்பெரிய மாற்றியமைக்கும் தொலைநோக்கு கொள்கை கொண்ட இந்தியா உலகிலேயே முதலீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்று குடியரசுத்துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.  

மால்டா நாட்டின் வேலட்டா நகரில், நேற்று (18.09.2018) மால்டா வர்த்தக சபையின் இந்திய தொழில்கள் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தியா – மால்டா வர்த்தக அமைப்பின் கூட்டத்தில், மால்டா அதிபர் மேரி – லூசி கோலைரோ ப்ரீக்கா முன்னிலையில் அவர் உரையாற்றினார். நிதித்துறை இணை அமைச்சர் திரு. சிவ் பிரதாப் சுக்லா, மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தற்போது சுமார் எட்டு சதவீத வேகத்தில் வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம் உலகின் மிகப் பெரிய விரைவாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று என்று குடியரசுத்துணைத் தலைவர் கூறினார். சமூக சீர்த்திருத்தங்களை அமல்படுத்த வளர்ச்சியும், மேம்பாடும் அடிப்படையானவை என்று குறிப்பிட்ட அவர், மாற்றத்தை கொண்டுவர அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறினார்.

2025-ம் ஆண்டு வாக்கில் ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், இதனையடுத்து இந்தியா உலக நுகர்வோர் சந்தையில் 3-வது மிகப் பெரிய நாடாகிவிடும் என்றார். வர்த்தகம், புரிதலில் எளிமை குறியீட்டில், இந்தியா 30 புள்ளிகள் முன்னேறியுள்ளது என்றும், சர்வதேச  பண நிதியத்தின் கணிப்பின்படி, இந்தியா 2018 மற்றும் 2019-ல் 7 சதவீதத்திற்கும்  கூடுதலான வேகத்தில் வளர்ச்சியடையும் என்றும் கூறினார்.

பொருளதார டிஜிட்டல் மயம், நிதித்துறையில், அனைத்தையும் உள்ளடக்கிய நிலை, ஜி.எஸ்.டி. போன்ற வரிச்சீர்த்திருத்தங்கள், உள்ளிட்ட பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளில் மத்திய அரசு உறுதியுடன் செயல்படுவதாக அவர் கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில் 32.6 கோடி பேர் வங்கிகளில் கணக்கு தொடங்கி நிதி சார்ந்த உள்ளடக்கிய தன்மையை உண்மையாக்கியுள்ளனர் என்றார் அவர். வரி செலுத்துவோர் எண்ணிக்கையும், வரிவிதிகளுக்கு உட்படுவோர் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக குடியரசுத்துணைத்தலைவர் கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close