தலைவராக்க உதயநிதியின் துண்டுக்குள் மு.க.ஸ்டாலின் மறைக்கும் ரகசியங்கள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 19 Sep, 2018 11:29 am

mk-stalin-s-hidden-secrets-into-udhayanidhi-s-piece

அ.தி.மு.க அமைச்சர்கள் குட்கா உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் சிக்கி திளைத்து கொண்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி விலகுமாறு ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதிமுக அரசோ குற்றம்சாட்டுவது எதிர்க்கட்சியின் கடமை என்று கூறிவிட்டது. இந்நிலையில் அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளை கண்டித்து தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் திமுக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஸ்டாலின் சேலத்தில் முழங்கிய அதே நேரம் ஆர்.கே.நகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகன் உதயநிதி பங்கேற்றார். ஸ்டாலினுக்கு  சேலத்தில் பேச எப்படி உரை தயாரிக்கப்பட்டதோ அதேபோல உதயநிதியும் ஆர்.கே.நகரில் என்ன பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே தயார் செய்துவிட்டார்களாம். (அந்த துண்டுப்பேப்பரை பார்த்துபேசும் உதயநிதியை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்)  உதயநிதி பேச வேண்டியதில் பல திருத்தங்களைச் செய்து  கொடுத்தது ஸ்டாலின்தான்.

‘இது கண்டன ஆர்ப்பாட்டம்தான்... இந்த அளவுல இருந்தால் போதும். அதிகம் பேசினாலும் யாரும் ரசிக்க மாட்டாங்க...’ என்று மகனுக்குச் சில அட்வைஸ்களையும் கொடுத்தாராம். அது மட்டுமல்ல, ‘ஜீன்ஸும், டி-ஷர்ட்டும் போட்டுட்டு போறதுக்கு இது சினிமா இல்லை. உன்னால இப்போ வேட்டி கட்டிட்டுப் போக முடியாதுன்னு தெரியும். பேண்ட் சட்டையாக இருந்தாலும் ஆர்ப்பாட்டத்துல மேடையில் நிற்கும்போது கண்டிப்பாகத் துண்டு போட்டுக்கோ. அதுதான் உனக்கான இமேஜை மக்களிடம் உண்டாக்கும்’ என்றெல்லாம் மகனுக்கு டிப்ஸ்களையும் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

அதன்படியே நேற்று மேடைக்குப் போகும்வரை துண்டு போடாத உதயநிதி, மேலே ஏறியதும் துண்டைக் கேட்டு வாங்கிப் போட்டுக்கொண்டார். அப்பா வழிகாட்ட மகனும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால் ஸ்டாலினுக்கு துண்டு போட்டுக்கொள்ளும் வழக்கம் இல்லை. ஒருவேளை, மகன் துண்டு போட்டுக்கொண்டால் அது கருணாநிதியை பிரதிபலிக்கும் என்பதால் ஸ்டாலின் தன் மகனைத் துண்டு போட வைத்திருப்பாரோ..? 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close