ம.பி-யில் அதிக தொகுதி... ராகுல் காந்தியுடன் மல்லுக்கட்டும் மாயாவதி!

  பா.பாரதி   | Last Modified : 20 Sep, 2018 03:52 am

mayawati-meets-with-rahul-gandhi

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற  உள்ளது. அங்கு பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் 15 ஆண்டுகளாக முதலமைச்சராக இருக்கிறார்.

இந்த முறை அவரை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்பது காங்கிரசின்  திட்டம். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அந்த மாநிலத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த திங்களன்று தொடங்கினார். பொது மக்களை ஈர்க்கும் வகையில் மாநில தலைநகர் போபாலை பேருந்திலேயே சுற்றி வந்தார். வழக்கம் போல் அவரது பேச்சு விஜய மல்லையா, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ரபேல் விமான விவகாரம் என பழைய சோறாகவே இருந்ததால் உடன் சென்ற மூத்த தலைவர்களே கொட்டாவிவிட  ஆரம்பிக்க தடாலடி நடவடிக்கையில் இறங்கினார் ராகுல்.
சதார் மஞ்சில் என்ற இடத்தில் பேருந்து சென்ற போது, அதிலிருந்து ‘சடார்’ என இறங்கி சாலை ஓர  டீ கடையில்  சமோசா சாப்பிட்டு டீ குடித்து, கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்களுடன் செல்பி எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். பாதுகாப்பு அதிகாரிகளின் பாடுதான் திண்டாட்டமாகி விட்டது.


மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் உதவி காங்கிரசுக்கு அவசியம் தேவை. அங்கு தலித் மக்களிடையே  மாயாவதிக்கு கணிசமான ஆதரவு உள்ளது. உ.பி.யில் கூடுதல் இடம் கேட்டு அகிலேஷ் யாதவை மிரட்டுவது போல்  ம.பி.யில் அதிக தொகுதிகள் கேட்டு காங்கிரசை அலற வைத்துள்ளது மாயாவதி கட்சி.

50 தொகுதிகள் வேண்டும் என்று அந்த கட்சி அடம் பிடிக்க 30 சீட்’டுகளுக்கு மேல் தர முடியாது என்று கதவை சாத்தி விட்டது  உள்ளூர் காங்கிரஸ். தொகுதி பங்கீடு விவகாரம் இப்போது டெல்லிக்கு இடப்பெயர்ச்சி ஆகி இருப்பதாக தகவல்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close