ஆங்கிலத்தில் புலமை பெற்ற பேச்சாளர்கள் தேவை: மோகன் பகவத்

  சுஜாதா   | Last Modified : 20 Sep, 2018 05:36 am

mohan-bhagwat-s-speech-on-concluding-day-of-rss-conclave

ஆங்கிலம் உள்பட எந்த ஒரு மொழிக்கும் ஆர்.எஸ்.எஸ்.  எதிரானவர்கள் அல்ல. மேலும், ஆங்கிலத்தில் புலமை பெற்ற பேச்சாளர்கள்  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு தேவை. என்று அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்  கூறியுள்ளார். 

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் எதிர்கால இந்தியா என்ற 3 நாள் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கருத்தரங்கில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

கருத்தரங்கில்  ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: கலப்பு திருமணத்துக்கு ஆர்.எஸ்.எஸ். எதிரி அல்ல. அது ஆண், பெண் இணக்கம் சார்ந்த பிரச்சினை. கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தினால் அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் இடம் பிடித்து இருப்பார்கள். தற்போதைய இந்திய கல்வி முறை மிகவும் பின்தங்கியதாக உள்ளது. எனவே நமக்கு புதிய கல்விக் கொள்கை தேவை.
மேலும்,  ஆங்கிலம் உள்பட எந்த ஒரு மொழிக்கும் ஆர்.எஸ்.எஸ்.  எதிரானவர்கள் அல்ல. ஆங்கிலத்தில் புலமை பெற்ற பேச்சாளர்கள் தேவைப்படுகின்றனர். நமது கலாச்சாரத்தையும் நவீன கல்வி முறையையும் உள்ளடக்கிய புதிய கல்விக்கொள்கை தேவை.

மேலும் அவர் பேசுகையில், “பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் எதிர்க்கப்பட வேண்டியவையே. இதில், எப்போதும் இரட்டை நிலைப்பாடு கிடையாது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ஆர்.எஸ்.எஸ் என்றும் ஏற்றுக்கொள்ளாது. அயோத்தியில் ராமர் கோவில் விரைந்து கட்டப்பட வேண்டும்” என்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.