அஜித் ஜோகியுடன் கூட்டணி வைக்கும் மாயாவதி! காங்கிரஸ் அதிர்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 21 Sep, 2018 03:00 pm

mayawati-firms-up-alliance-with-ajit-jogi-s-party-in-chhattisgarh-congress-says-will-go-it-alone

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா காங்கிரஸின் அஜித் ஜோகியுடன் கூட்டணி வைத்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். 

இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனதா காங்கிரஸுடன் கூட்டணியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. 

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், ஜனதா காங்கிரஸ் தலைவருமான அஜித் ஜோகியுடன் இணைந்துள்ளார் மாயாவதி. இதனால் காங்கிரஸ் தனித்துபோட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.

சத்தீஷ்கரில் ஜனதா காங்கிரஸ் 55 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 35 இடங்களிலும் போட்டியிடும் என்றும், இந்த கூட்டணி வெற்றி பெற்றால் அஜித் ஜோகி முதல்வராக பதவி ஏற்பார் எனவும் மாயவதி தெரிவித்துள்ளார். 

தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close