அங்கன்வாடி பணியாளர்களின் ஊக்கத்தொகை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்

  சுஜாதா   | Last Modified : 22 Sep, 2018 08:27 am

anganwaddi-workers-and-anganwadi-helpers-performance-linked-incentive-to-awhs

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கான மதிப்பூதியத்தை அதிகரிக்கவும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு  செயல்திரனுகேற்ற ஊக்கத்தொகையை அளிக்கவும் (ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள்  திட்டத்தின் கீழ்) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 01.10.2018 முதல் 31.03.2020 வரை இதனை செயல்படுத்த தேவையான மொத்த செலவு ரூ. 10,649.41 கோடியாகும். 

இந்த ஒப்புதல் மூலம் சுமார் 27 லட்ச அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறுவர்.

இது தொடர்பான விவரங்கள்:

கீழ்கண்டவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் தற்போது கொடுக்கப்பட்டு வரும் தொகை (மாதத்திற்கு) திருத்தப்பட்ட புதிய தொகை (மாதத்திற்கு)
அங்கன்வாடி பணியாளர்கள் ரூ.3,000/- ரூ.4,500/-
சிறிய அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் ரூ.2,250/- ரூ.3,500/-
அங்கன்வாடி உதவியாளர்கள் ரூ.1,500/- ரூ.2,250/- 

அங்கன்வாடி மையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு இதனுடன் சேர்த்து திறனுக்கேற்ற ரூ. 250/- ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இந்த ஒப்புதல் அக்டோபர் 1, 2018-ல் இருந்து செயல்பாட்டிற்கு வரும்.

நிதி செலவீடுகள்:

01.10.2018 முதல் 31.03.2020 வரை இதனை செயல்படுத்துவதற்கான செலவினங்கள் கீழ்வருமாறு

      

பங்கீடுகள்

2018-19

(ஆறு மாதத்திற்கு)

2019-20 மொத்தம்
அங்கன்வாடி பணியாளர்களுக்கான மதிப்பூதியம் 2182.63 4365.27 6547.90
சிறய அங்கன்வாடிகளில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான மதிப்பூதியம்  154.60 309.19 463.79
அங்கன்வாடி உதவியாளர்களுக்கான மதிப்பூதியம் 1212.57 2425.15 3637.72
மொத்தம் 3549.8 7099.61

10649.41

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close