பூட்டானை குடும்ப உறுப்பினராக இந்தியா கருதுகிறது: வெங்கைய நாயுடு 

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2018 09:32 am

india-considers-bhutan-to-be-part-of-its-own-family-naidu

பூட்டானை குடும்ப உறுப்பினராக இந்தியா கருதுகிறது என்றும், அமைதி, வளம் மற்றும் வளர்ச்சியை எட்டுவதில் இருநாடுகளும் இணைந்து செயல்படுகின்றன என்று டெல்லியில் நேற்று பூட்டான் வாரத்தை துவக்கி வைத்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியில், பூட்டான் ராணியின் தாயார் சாங்கே சோடன் பங்கேற்றார். நேபாளத்தோடு, தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதன் பொன்விழாக் கொண்டாட்டங்களை ஓட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு, இந்தியா – பூட்டான் ஒத்துழைப்பு, நம்பிக்கை, நல்லெண்ணம், பரஸ்பரம் புரிந்து கொள்ளுதல் என அனைத்து மட்டத்திலும் வலுவாக இருப்பதாக குறிப்பிட்டார். இருநாடுகளின் உறவு வலுப்படுவதற்கு இருநாட்டு மக்களும் அளித்த பங்களிப்பை குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.

இந்தியா – பூட்டான் ஒத்துழைப்பு, பன்முகத் தன்மை கொண்டது என்று குறிப்பிட்ட அவர், வர்த்தகம், பொருளாதாரம், கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு என அனைத்துத் துறைகளிலும் இருநாடுகளும் ஒத்துழைத்து வருவதாக தெரிவித்தார். இருநாட்டு மக்களின் தொடர்புகள் இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார். பூட்டானின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மக்களின் தனித்தன்மையான வாழ்க்கை, ஆண்டாண்டு காலமாக இந்திய மக்களை கவர்ந்துள்ளது என்று தெரிவித்த அவர், பூடான் வாரம் போன்ற நிகழ்வுகள் இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

பூட்டான் வார விழா, இந்திய இளைஞர்கள் உட்பட அனைத்து மக்களும், பூட்டானின் வளமான கலாச்சார பாரம்பரியம், அதன் கலை மற்றும் கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், ஜவுளி மற்றும் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்கள், பூட்டானின் பாரம்பரிய இசை மற்றும் நடனங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள உதவும் என்று திரு. வெங்கைய நாயுடு குறிப்பிட்டார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close