மம்தாவை எதிர்ப்பதா..? மாநில காங்., தலைவரை பந்தாடிய ராகுல்!

  பா.பாரதி   | Last Modified : 25 Sep, 2018 03:01 pm

do-not-resist-mamta-state-cong-leader-of-the-rahul-gandhi-to-be-sworn

காங்கிரஸ் வலிமையாக உள்ள மாநிலங்களை விட, பலவீனமாக உள்ள மாநிலங்களில் தான் கோஷ்டி பூசல் அதிகம். அதற்கு நமது தமிழகமே  சாட்சி. இதே நிலைதான் மே.வங்க மாநில காங்கிரசிலும். 

திரிணாமூல் காங்கிரஸ் (டி.எம்.சி), பாஜக, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு அடுத்த நிலையில்தான் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் உள்ளது. ஆனால், கோஷ்டி பூசலுக்கு பஞ்சமில்லை. அந்த மாநிலத்தில் இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்தவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. மம்தாவை இவருக்கு சுத்தமாக பிடிக்காது. காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக 10 எம்.எல்.ஏ.க்கள் டி.எம்.சி.கட்சியில் இணைந்தனர். சவுத்ரியின் பாஜக ஆதரவு போக்குதான் இதற்கு  காரணம் என எதிர் கோஷ்டிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

                                                                                        ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

இந்நிலையில், அவரை  தலைவர் பதவியில் இருந்து தூக்கி அடித்துள்ளார் ராகுல். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோமன் மித்ரா, 76 வயதான பழம் பெரும் அரசியல்வாதி. இதற்கு முன்பும் அந்த  மாநில காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். சி.பி.எம்.கட்சி, இவருக்கு வேப்பங்காய். மம்தாவின்  ஆதரவாளர்.

                                                                        சோமேந்திரநாத் மித்ரா

மித்ரா தலைவராக நியமிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்களை  சொல்கிறார்கள். இவர், மம்தா ஆதரவாளர் என்பதால், இனிமேல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் டி.எம்.சி.கட்சிக்கு தாவ மாட்டார்கள். மம்தாவுடன் சவுத்ரி,  நட்பில் இருப்பதால், டி.எம்.சி.கட்சியுடன் காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு கொள்வதற்கு தோதாக இருப்பார் என்று ராகுல் நினைக்கிறார். எதிர்கால கூட்டணியை  மனதில் கொண்டே மித்ரா, மே.வங்காள காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

-பா.பாரதி

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close