எம்.பி- எம்.எல்.ஏ-க்களுக்கு குறி... மாவோயிஸ்டுகளின் வெறியாட்டம்!

  பா.பாரதி   | Last Modified : 25 Sep, 2018 05:34 pm

araku-mla-shot-dead-by-maoists

ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ சர்வேஸ்வர ராவை சுட்டுக்கொன்றுள்ளனர் மாவோயிஸ்டுகள். அவரை கொன்ற 15 மாவோயிஸ்டுகளில் பெரும் பகுதியினர் அந்த அமைப்பின் பெண் போராளிகள்.

சந்திரபாபு நாயுடுவிடன் சர்வேஸ்வர ராவ்

சட்ட விரோதமாக அந்த எம்.எல்.ஏ குவாரி நடத்தி வந்துள்ளார்.  "அதனை மூடாவிட்டால் உங்களை கொல்வோம்’’ என மாவோயிஸ்டுகள் கடந்த ஏப்ரல் மாதமே சர்வேஸ்வர ராவுக்கு மிரட்டல் விடுத்திருந்தனர். அதனைப் பொருட்படுத்தாதால் பலி ஆகி விட்டார்.  மாவோயிஸ்டுகள் செப்டம்பர் 21ம் தேதியை தங்கள் நிறுவன தினமாக கொண்டாடுவது வழக்கம். இதனால், ராவை போலீசார், வெளியே எங்கும் செல்ல வேண்டாம். வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று முன் கூட்டியே எச்சரித்துள்ளனர். அதையும் மீறி பயணம் மேற்கொண்டதால், தன் உயிரை இழந்துள்ளார். மாவோயிஸ்டுகள் எம்.பி.- எம்.எல்.ஏ. என மக்கள் பிரதிநிதிகளை குறி வைத்து தாக்குவதே வழக்கம்.

இதற்கு முன்னால் அவர்களால் கொல்லப்பட்டவர்களின் சிறு பட்டியல்... 1995ல் காங்கிரஸ் எம்.பி.சுப்பாராம ரெட்டியை சுட்டுக்கொன்றனர்.

1999-ல் முன்னாள் சபாநாயகர் ராவ் கொல்லப்பட்டார். அதே ஆண்டில் புருஷோத்தம் ராவ் என்ற எம்.எல்.ஏ., கொலை. கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ. நர்சி ரெட்டியை சுட்டுக்கொன்றனர். ஒரு பள்ளி விழாவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தின் போது அவருடன் இருந்த மேலும் 8 பேரும் உயிர் இழந்தனர். 

மீண்டும் 13 வருடங்களுக்கு பிறகு இப்போது தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

newstm

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close