மீண்டும் கழற்றிவிட நிதிஷ்குமார் திட்டம்... ரகசியமாக கண்காணிக்கும் பாஜக!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 25 Sep, 2018 07:32 pm

nitish-kumar-plans-to-get-rid-of-it-again-bjp-secret-watch

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான, நிதிஷ் குமாரின் சமீபகால நடவடிக்கைகளை, கூட்டணி கட்சியான, பா.ஜ.க., தலைவர்கள், சந்தேகத்துடன் உற்று நோக்கத் தொடங்கியுள்ளனர். 

பீகாரில், கடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து, நிதிஷ்குமார்  ஆட்சியைப் பிடித்தார். லாலுவின் மகன்கள், தேஜஸ்வியும், தேஜ் பிரதாப்பும் செய்த அட்டகாசத்தை பார்த்து, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை கழற்றி விட்டு, பா.ஜ.கவுடன் மீண்டும் இணைந்தார். பா.ஜ.,வுடனான உறவு சுமுகமாக இருப்பதாக, வெளியில் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள், திரைமறைவு வேலைகளை அரங்கேற்றி வருகிறார், நிதிஷ்குமார்’’ என்கிறார்கள்.

'அடுத்தாண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தலில், மீண்டும் லாலு கட்சிக்கு தாவலாம் அல்லது தனியாக தேர்தலை சந்திக்கலாம்' என்ற முடிவுக்கு வந்து விட்டதை போல் உள்ளது, அவரது சமீபத்திய நடவடிக்கைகள். தேர்தல் பிரசார வியூகங்களை வகுப்பதில் நிபுணரான, பிரசாந்த் கிஷோர், சமீபத்தில், நிதிஷ் குமார் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். இந்த சந்திப்புக்கு பிறகே, அவரது நடவடிக்கைகள் மாறி விட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர்.  'சமீபத்தில் நடந்து முடிந்த சில தேர்தல்களில், பிரசாந்த் கிஷோரின் வியூகம் பலிக்கவில்லை.

இது நன்கு தெரிந்திருந்தும், பா.ஜ.க,வை கழற்றி விட, நிதிஷ் குமார் திட்டமிடுவது, அரசனை நம்பி, புருஷனை கைவிட்ட கதையாக மாறப் போகிறது' என, கிண்டலடிக்கின்றனர், பீகார் அரசியல்வாதிகள் விமர்சகர்கள்.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close