மருத்துவ துறையில் இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய- அமைச்சரவை ஒப்புதல்

  சுஜாதா   | Last Modified : 27 Sep, 2018 08:03 am

cabinet-approves-mou-between-india-and-uzbekistan-on-cooperation-in-pharmaceutical-sector

இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே மருத்துவ துறையில் வர்த்தகம், தொழிற்சாலை, ஆய்வு மற்றும் வளர்ச்சி ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில கையெழுத்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், உஸ்பெகிஸ்தான் அதிபர் அக்டோபர் 1, 2018 இந்தியா வரும் போது கையெழுத்திட உள்ளார்.

 இரு நாடுகளிலும் மருந்து துறையின் வளர்ச்சி மற்றும் மருந்து துறையில் வர்த்தகம், உற்பத்தி, ஆய்வு மற்றும் வளர்ச்சியில் இருதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கருதி இரு நாடுகளும் அதிகாரபூர்வ ஒத்துழைப்பை ஏற்படுத்த முயன்று வந்தன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு மருத்துவ முறைகளில் பயன்டுத்தப்படும்,  செயல் திறன்மிக்க மருந்துக்கான மூலப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தி மருந்து உற்பத்திகான வாய்ப்புகளை ஆராய வகை செய்கிறது. இந்த ஒப்பந்தம் வர்த்தகம் மற்றும் பதிவு முறைகள், செயல் திறன்மிக்க மருந்து மற்றும் மருந்து பொருட்களுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும். இந்த ஒப்பந்தம் உஸ்பெகிஸ்தான் குடியரசுடன் மருந்து பொருட்களின் வர்த்தகம், தொழிற்சாலை, ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை அதிகரிக்கும்.   

கீழ்கண்ட துறைகளுக்கான ஒத்துழைப்பு உறவு இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும்:

  1. மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் ஆய்வு கூட உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்தி துறையில் உள்ள வர்த்தக வைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு
  2. ஆரம்ப சுகாதார வசிதிகளை வலுப்படுத்துதல் மற்றும் சுகாதார சேவை வசதிகளை ஏற்படுத்துதல்
  3. மருத்துவம் மற்றும் சுகாதார ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் இந்த துறைகளில் உள்ள அனுபவத்தை பரிமாறுதல்.
  4. தொலைமருத்துவம் மற்றும் இணைய சுகாதார தகவல் முறை ஆகிய துறைகளில் உள்ள அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பரிமாற்றம்.
  5. தாய் சேய் சுகாதார நலன்பாதுகாப்பு;
  6. ஆட்கொல்லி நோய் கண்காணிப்பு, தொற்று நோய்  மற்றும் தொற்றா நோய் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான நுட்பங்கள் மற்றும் உத்திகள் உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்
  7. மருந்துகள் மற்றும் மருந்து பொருட்களின் ஒழுங்குமுறை கட்டுப்பாடு;
  8. இரு தரப்பிற்கும் பரஸ்பர ஆர்வம் உள்ள துறைகளில் ஒத்துழைப்பு

இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் தகவல்களை விரிவுபடுத்தவும் அதனை நடைமுறைபடுத்துவதை கண்காணிக்கவும் செயற்குழு நியமிக்கப்படும்.

 

மேலும், இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே போதைப் பொருள், மருந்துப்பொருட்கள், மன நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்கள், ஊக்க மருந்துகளை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்க பரஸ்பரம் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 
பலன்கள்:
இந்த ஒப்பந்தம் போதைப் பொருள், மருந்துப்பொருட்கள், மன நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்கள், ஊக்க மருந்துகளை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்க பரஸ்பரம் ஒத்துழைப்பதற்கு உதவும். கண்டறியப்பட்டுள்ள துறைகளில், சிறந்த செயல் முறையுடன் செயல்பட இரு நாடுகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்க இது உதவும். இது இரு நாடுகளின் அரசுகளுக்கும் இடையே நிறுவன கலந்துரையாடலை ஊக்குவிக்கும். இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட பின், இரு நாடுகளுக்கு இடையேயான போதைப் பொருள் கடத்தல் தடுக்கப்படும் 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close