கல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு மாநாடு : மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

  சுஜாதா   | Last Modified : 29 Sep, 2018 07:26 am

pm-to-inaugurate-conference-on-academic-leadership-on-education-for-resurgence

கல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு என்ற மாநாட்டை  பிரதமர் நரேந்திர மோடி  டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார்

கல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு  என்பது குறித்த மாநாடு டெல்லி  விஞ்ஞான் பவனில் இன்று  (29.09.2018) நடைபெறுகிறது. 350க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் / இயக்குநர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டுக்கு பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப சபை,  இந்திய சமூக விஞ்ஞான ஆராய்ச்சி சபை, இந்திராகாந்தி தேசிய கலை மையம், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஸ்ரீகோவிந்த் சிங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

இந்திய கல்வி அமைப்பை எதிர்நோக்கி உள்ள சவால்கள் குறித்து ஆய்வு செய்வது, கல்வி நோக்கங்களை அடைவதற்கான மாற்றத்திற்குரியத் திட்டம் வரைவது, கல்வி அமைப்பில் கட்டுப்பாடுகள் குறித்து ஆராய்வது ஆகியன இந்த மாநாட்டின் நோக்கங்களாகும். 

பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை இன்று காலை தொடங்கி வைக்கிறார்.  அதனை தொடர்ந்து 8 அமர்வுகள், கீழ்க்கண்ட  சிறப்பு கருத்துகள் குறித்து விவாதங்களை நடத்தும்.

1  கற்போர் மைய கல்விக்கான கற்றல் கற்பித்தலை மேம்படுத்துதல்-கற்றலில் செயற்கை அறிவை பயன்படுத்துதல்.
2 வேலை தேடுதல் என்பதிலிருந்து வேலை உருவாக்குதல் என்பதை நோக்கி- புதுமைப் படைப்பு மற்றும் தொழில் முனைவுத் திறனை மேம்படுத்துதல்.
3  ஆராய்ச்சித் தரங்களை உயர்த்துதல்-இந்தியாவின் தேவைகளுக்கு முக்கிய கவனம் செலுத்துதல்.
4  கல்வி நிறுவனங்களிடையே ஒருமித்த உணர்வுகளை உருவாக்குதல்-நூலகங்கள் பகிர்வு மற்றும் அறிவுப் பரிவர்த்தனை போன்ற கல்வி ஆதாரங்களை இணைத்துப் பயன்படுத்துதல்.
5  அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்களை உருவாக்குதல்-வளாகத்தில் மாணவர்களின் உணர்வு இணைப்புகளை ஏற்படுத்தும்  நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
6  பங்கேற்பு ஆளுகை மாதிரிகள்-ஆளுகை நடைமுறையில் மாணவர்கள் பங்கேற்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருதல்.
7  வலுவான நிதி மாதிரிகளை உருவாக்குதல்- அரசு நிதியுதவியுடன் முன்னாள் மாணவர்கள் மற்றும் கம்பெனிகளிலிருந்து நிதி பெற்று இணைத்து செயல்படுத்துதல்.
8  கல்வியில் பொதுவான நன்னெறிகளையும், வாழ்க்கைத் திறன்களையும் இணைத்து நன்னெறிக் கல்வியை மேம்படுத்துதல்.
  
மாநாட்டின்  நிறைவு அமர்வுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையேற்கிறார். இந்த அமர்வில் 8 குழுக்களும் தங்களது செயல் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.