தாய் மற்றும் சகோதரிகளின் கவுரவத்தை அவமதிக்கும் எதையும் செய்யவேண்டாம்: வெங்கையா நாயுடு வேண்டுகோள்! 

  சுஜாதா   | Last Modified : 29 Sep, 2018 08:02 am

don-t-do-anything-to-dishonor-prestige-of-our-mothers-and-sisters-vice-president-tells-students

நமது தாய் மற்றும் சகோதரிகளின் கவுரவத்தை அவமதிக்கும் எதையும் செய்யவேண்டாம் என்று மாணவர்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர்  எம். வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் மிக உயரிய நன்னெறிகளை கடைபிடிக்க தொடர்ந்து உறுதியுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

கோவா மாநிலம் பனாஜியில் நேற்று (28.09.2018) தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 4-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  வெங்கையா நாயுடு நிகழ்ச்சியில் பேசியதாவது:  

பல்கலைக்கழகங்கள், தங்களது பாடத் திட்டங்களை முற்றிலும் மாற்றி அமைக்கவேண்டியது அவசியம். மேலும், தொழில்துறையின் தேவைகளுக்கேற்ப  கற்பித்தல் நடைமுறைகளை மாற்றியமைக்குமாறு அவர் கூறினார். லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்புக்கான அடிப்படை திறன்கள் இன்றி ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெற்று வெளியேறுவது விரும்பத்தக்கது அல்ல என்றும் அவர் கூறினார்.

புதிய உச்சத்தை  அடைவதற்கு குறுக்கு வழியோ, உடனடி தீர்வுகள் எதுவோமோ இல்லை என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இளைஞர்கள் சகிப்புத் தன்மை, நேர்மை, பொறுமை, இரக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றை கொண்டிருந்தால் மட்டுமே தங்கள் கனவுகளை நனவாக்க முடியும் என்று அவர் கூறினார். புதுமையான, சிக்கனமாக, தீர்வுகளை குறிப்பாக மருத்துவ பராமரிப்பு, கல்வி ஆகிய துறைகளில் கொண்டுவர முயற்சி எடுக்க வேண்டும் என்று மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

2030-வாக்கில் இந்தியா உயர் நடுத்தர வருமான நாடாக மாறிவிடும் என்று குறிப்பிட்ட வெங்கையா நாயுடு, திறன் பயிற்சி மிக்க மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் காத்திருக்கும் என்று கூறினார். நல்ல வேலைவாய்ப்பு அல்லது சுய வேலைவாய்ப்பு பெறும் வகையில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், மத்திய அரசின் திறன் இந்தியா திட்டம் இதற்கெனவே நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கோவா மாநில ஆளுநர் திருமதி. மிர்துளா சின்ஹா, கோவா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆளுகை வாரியக் குழுத்  தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இதர பிரமுகர்கள் பங்கேற்றனர்.   

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close