அக் 1 முதல் 10-ஆம் தேதி வரை பாரத ஸ்டேட் வங்கியில்  தேர்தல் பத்திரங்கள் விற்பனை!

  சுஜாதா   | Last Modified : 29 Sep, 2018 09:30 am
5th-tranche-of-electoral-bonds-sale-from-october-1-finance-minister

பாரத ஸ்டேட் வங்கி தனது 5-வது கட்ட விற்பனையில், தேர்தல் பத்திரங்களை விநியோகிக்கவும், பணமாக மாற்றிக் கொடுக்கவும் அங்கீகாரம் பெற்ற 29 கிளைகளில் 01.10.2018 முதல் 10.10.2018 வரை வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடர்பாக ஜனவரி 2 ம் தேதி மத்திய அரசு "அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) இருந்து தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கலாம்" என்று  அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கலாம்.  இந்திய குடிமகனோ அல்லது இந்தியாவுடன் இணைக்கப்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட பகுதியின் குடிமகனோ தேர்தல் பத்திரங்களை வாங்கத் தகுதி படைத்தவர் ஆகிறார். தனிநபராகவோ, கூட்டாகவோ அல்லது மற்ற தனிநபர்களுடன் இணைந்தோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.  

1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 29-ஏ பிரிவின்படி (43 of 1951), பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், கடைசியாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல்களில், பதிவான மொத்த வாக்குகளில், ஒரு சதவீதத்திற்கும் குறையாமல் வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே தேர்தல் பத்திரங்களை வாங்குவதற்கு தகுதி படைத்தவை ஆகும். தேர்தல் பத்திரங்களை அங்கீகாரம் பெற்ற வங்கியில் தங்களது வங்கிக் கணக்கில் தகுதியான அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

பாரத ஸ்டேட் வங்கி தனது 5-வது கட்ட விற்பனையில், தேர்தல் பத்திரங்களை விநியோகிக்கவும், பணமாக மாற்றிக் கொடுக்கவும் அங்கீகாரம் பெற்ற 29 கிளைகளில் 01.10.2018 முதல் 10.10.2018 வரை வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தமட்டில் சென்னை, பாரிமுனை, தம்புச் செட்டி தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் 800 தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள்  விலை ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரை  என்பது குறிப்பிடத்தக்கது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close