ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 4 முறை விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்

  Newstm News Desk   | Last Modified : 29 Sep, 2018 01:24 pm

nirmala-seetharaaman-press-meet

சென்னை ராணுவ பயிற்சி மையத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, "நாட்டுக்காக ராணுவம் எந்தளவுக்கு தியாகம் செய்திருக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துச் சொல்லத் தான் இந்த சந்தர்ப்பம். இதுக்கு முன்னாடி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எந்த அரசுக்குக் கீழ் நடந்ததோ, அந்த அரசு எடுத்து சொல்லியதா என நமக்குத் தெரியாது. அதைப்பற்றி என்னால் கருத்துக் கூற முடியாது. 

ஆனால் 2016-ல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்த வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டிருக்கு? போர் இல்லாத சூழ்நிலையில் நம் நாட்டு சேனையில் இருக்கக் கூடிய படைவீரர்கள் ஒரு ராணுவ அடிப்படையில் தங்கி இருக்கிறார்கள். சந்தர்ப்பம் பார்த்து அதன் உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 17 வீரர்களை அடித்து அவர்களை கொன்று விட்டார்கள். 

2012-ல்காங்கிரஸ் ஆட்சியில் இருந்தப் போது, டஸ்ஸால்டுடன் ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். அப்போது அந்த ஒப்பந்தம் காங்கிரஸிற்கு நன்றாக இருந்தது. இந்த ஒப்பந்தத்தைப் போடுங்கள் என நாங்கள் சொல்லவில்லை. ஏனென்றால் நீங்கள் கொள்முதல் செய்வதற்கான வழிமுறை டென்டர் மூலமாக நடந்தது. இதில் இன்டெல் கவர்மென்ட் அக்ரிமென்டில் நடந்தது. இதனால் எந்த ஒரு நிறுவனத்தின் பெயரும் அக்ரிமென்டில் போட முடியாது. 

ஆக, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது இந்த ஒப்பந்தம் நடந்தப் போது, இது விவகாரம் இல்லை. ஆனால் இப்போது இதை விவகாரமாக்கியுள்ளனர். ஒப்பந்தம் சமபந்தமான விதிகளையும் காங்கிரஸ் தான் மாற்றியது. ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 4 முறை விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது" என்றார். 

newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close