மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முடியாது - சீனா முட்டுக்கட்டை!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 29 Sep, 2018 11:15 pm

china-defends-terrorist-masood-azhar

உரி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களில் மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.

2016ம் ஆண்டு காஷ்மீரின் உரியில் உள்ள ராணுவ தளத்தின் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவன் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார். மேலும், பல பயங்கரவாத தாக்குதல் சம்பங்களில் அசாருக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டகிறது.

இது தொடர்பான ஆதாரங்களை இந்திய அரசு ஐ.நா பாதுகாப்பு கவுன்சலில் தாக்குதல் செய்திருந்தது. இதற்கு, அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நிரந்தர நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால், பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் சீனா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

ஐ.நா பொது சபையின் 73வது கூட்டத்தில் பங்கேற்றுள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இது குறித்து கூறுகையில், "இந்திய அரசின் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை. இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் ஏற்க மறுக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்க முடியாது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா அறிவிக்கும் விஷயத்தில் நாங்கள் உடன்பட முடியாது" என்றார்.

இது இந்தியாவின் முயற்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close