கட்சிகளின் தில்லு முல்லு: ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகும் சூழல்

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2018 01:15 pm

69-candidates-in-valley-have-no-opponent

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான நகராட்சி வார்டுகளில் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. பல இடங்களில் சொல்லி வைத்தது போல ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த மாநில கட்சிகளின்தேர்தல் தில்லு முல்லு செயல்கள் வெளியாகியுள்ளன. இச்சூழலில், தேர்தலின் நம்பகத்தன்மை குறித்த அச்சம் காரணமாக பல தொகுதிகளின் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதைக் கண்டித்து,அங்குள்ள பிரதான அரசியல் கட்சிகளான பிடிபி, என்சிபி உள்ளிட்டவை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு உள்பட்ட மாவட்டங்களில் இருக்கும் நகராட்சிகளுக்கு அக்டோபர் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அப்பகுதிகளில் மொத்தமுள்ள 187 நகராட்சி வார்டுகளில் தற்போது வரை 131 வார்டுகளில் எந்த வேட்பாளரும் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவில்லை அல்லது போட்டியின்றி தேர்வாகும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரேயொரு வேட்பாளர் வீதம் மட்டுமே மனு தாக்கல் செய்ய வைக்கப்பட்டுள்ளனர்.

குல்காம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரிசல் நகராட்சியில்  உள்ள 13 வார்டுகளிலும் வேட்பாளர்கள் எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை பீர்வாஹ், பீஜ்பெஹரா, யாரிபோரா போன்ற நகராட்சிகளில் பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யவில்லை.

பெரும்பாலான நகராட்சி வார்டுகளில் ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர் என்பதால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இத்தகைய சூழலில் தேர்தலின் நம்பகத்தன்மை கேள்விக்குரியாகி உள்ளது. அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் நடைமுறையை மீறி பிரிவினைவாதிகளின் பெயரால் அவர்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு தொகுதிகளை கைப்பற்ற தேர்தல் ஆணையத்தை குறுக்கு வழியில் மீறச் செயல்படத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து நம்பகத்தன்மை பாதிக்கப்படும் சூழலில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தல் பல தொகுதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட அல்லது ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வெளியாகியுள்ள  தகவல்கள் தெரிவிக்கின்றன

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close