ராகுலைக் கிண்டலடித்த நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2018 03:22 pm

hollande-claim-linked-to-charges-against

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலாண்டே, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பேசுவதற்கு முன்னரே காங்கிரஸ் தலைவர் ராகுல் அதுகுறித்து அறிவிப்புகளை முன்னதாகவே வெளியிட்டு வருவது ஆச்சரியமளிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கிண்டல் செய்துள்ளார். 

இந்தியாவின் மீது  தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் எல்லையருகே காத்திருந்த தீவிரவாதிகளின் முகாம்களை துல்லியத்தாக்குதல் மூலம்அழிக்கப்பட்டது தொடர்பாக சென்னையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில்நடைபெற்ற இரண்டாவது ஆண்டு வெற்றி தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தீவிரவாதிகளின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி மற்றும் பாடம் கற்பிக்கும் நோக்கத்துடனேயே அவர்கள் மீது துல்லியத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டுசாட் நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து மாற்றி மாற்றி  சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிவருகிறார் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி ஹாலாண்டேயின் பங்குதாரருக்கு தொடர்புடைய நிறுவனம் ஒன்று பிற நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளதாகக் கூறப்படும் சகாயங்கள் குறித்து பிரான்ஸ் அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. என்று தெரிவித்தார்.

மேலும் ஹாலாண்டே நேரத்துக்கு ஒருவிதமாக பேசிவருவதற்கு பிரான்ஸ் அரசின் இந்த விசாரணை காரணமாக இருக்கலாம் என்று கருதுவதாகவும் அப்போது நிர்மலா தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஹாலாண்டே பேசி வருவதையும், அவரது பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் தெரிவித்து வரும் கருத்துகளையும் உற்று நோக்கினால், பிரான்ஸ் முன்னாள் அதிபர், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ஏதாவது பேசுவதற்கு முன்னரே அதுகுறித்து ராகுல் முன்னதாகவே கருத்து தெரிவித்து விடுவது, தனக்கு ஆச்சரியமளிப்பதாக உள்ளது என நிர்மலா சீதாராமன், சென்னையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டார் 

இதன் மூலம் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில்தான், பிரான்ஸின் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து அவ்வப்போது பேட்டிகள் அளித்து வருவதாக நிர்மலா சீதாராமன் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close