’பாலுக்கும் காவல்... பூனைக்கும் தோழனா..? ‘அழகிரி- ஸ்டாலின்‘ ஸ்டைல் உ.பி. அரசியல்!

  பா.பாரதி   | Last Modified : 02 Oct, 2018 05:39 am

alagiri-stalin-style-uttar-pradesh-politics

‘வீட்டுக்கு வீடு வாசல் படி’ என்ற பழமொழியை ‘மாநிலத்துக்கு மாநிலம்  வாசல் படி’ என்று  மாற்றி விடலாம். வேறு ஒன்றும் இல்லை. தமிழகத்தில்  மு.க.அழகிரிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் நடக்கும் அரசியல் யுத்தம், உத்தர பிரதேச மாநிலத்திலும் அச்சு அசலாக நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது.

கருணாநிதியை போலவே உபியில் மக்கள் செல்வாக்கு கொண்டவராக இருந்தார், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங். முதுமை காரணமாக, கருணாநிதியை போலவே பொறுப்புகளை மகன் அகிலேஷ் யாதவ் வசம் ஒப்படைக்க, அவரோ கட்சி தலைவராவே முடி சூட்டிக்கொண்டார்.  அப்பாவை மட்டுமல்லாது, சொந்த சித்தப்பா சிவபால் யாதவையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தார் அகிலேஷ்.
கோபம் கொண்ட சிவபால், மதச்சார்பற்ற சமாஜ்வாதி என்ற பெயரில் தனி கட்சியை தொடங்கி விட்டார். ஆரம்பத்தில்  தம்பி சிவபாலுக்கு ஆதரவாகத்தான் இருந்தார் முலாயம்.

தனது  வலிமையை காட்ட வரும் 2 ஆம் தேதி எட்டவா நகரில் பிரமாண்ட விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார் சிவபால். இதற்கான சுவரொட்டிகளில், தன் போட்டோவுடன் அண்ணன் முலாயம் போட்டோவையும் சேர்த்திருந்தார். ஆனால், அந்த சுவரொட்டிகளில் இப்போது முலாயம் போட்டோ ‘மிஸ்ஸிங்’. இடையில் என்ன நடந்தது?

கடந்த வாரம் டெல்லியில் பேரணி ஒன்று நடத்தினார் அகிலேஷ். இதில் முலாயம் கலந்து கொண்டார். இதனால், வெகுண்டெழுந்த சிவபால், அண்ணன் போட்டோக்களை அகற்றிவிட்டாராம். ‘’பாலுக்கும் காவல்... பூனைக்கும் தோழனா?’’ என சொந்த அண்ணன் மீது  புகார் பட்டியல் வாசித்து  புலம்பி திரிகிறார், சிவபால்.

தமிழகத்துக்கும்,  உபிக்கும் வித்தியாசம் என்ன வென்றால், இங்கே, தம்பி பலமாக இருக்கிறார். அங்கே, தம்பி பலவீனமாக இருக்கிறார்.

-பா.பாரதி

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close