இந்தியா மற்றும் ரஷ்யா இடையே சாலை போக்குவரத்து!

  சுஜாதா   | Last Modified : 04 Oct, 2018 05:47 am

cabinet-approves-mou-b-w-india-and-russia-on-road-transport-cooperation

சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்தாவும் மேம்படுத்தவும் இரு நாடுகளும் கலந்துரையாடி முடிவு செய்து சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும்  சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் பயன்பெறும். சாலை போக்குவரத்து மற்றும் அதிநவீன போக்குவரத்து முறை ஆகிய துறைகளில்நீண்ட கால மற்றும் சிறந்த இருத்தரப்பை உறவினை உருவாக்க ரஷ்யா உடனான அதிகரித்த ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் உதவும். நாட்டில் சாலை உட்கட்டமைப்பு, சாலை இணைப்பு மேலாண்மை, போக்குவரத்து கொள்கை, தொழிநுட்பம், கட்டுமானத்திற்கான தரநிலைகள், நெடுஞ்சாலை  செயல்பாடு ஆகியவற்றை திட்டமிடவும் நிர்வாக செய்யவும் இந்த ஒப்பந்தவும் உதவும். மேலும், இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ள இருத்தரப்பு உறவினை மேலும் வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் பயன்படும்.

ரஷ்யா அதிபர் இந்தியாவிற்கு வருகை தரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close