சந்திரபாபு நாயுடு ஒரு துரோகி: சந்திரசேகர் ராவ்

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2018 07:50 pm

chandrababu-naidu-is-a-traitor-chandrasekar-rao

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியபோது, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தெலங்கானா மக்களின் துரோகி என்றும், திருடன் என்றும் விமர்சித்தார். 

சுமார் ஒரு மாத கால இடைவேளைக்கு பிறகு நிசாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசினார். அப்போது அவர், ஒரு மாதம் முதல்வர் பதவிக்கு மரியாதை கொடுத்து, அமைதியாக இருந்ததாக கூறினார். "மீண்டும் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் என ஆந்திரா - டெல்லி கூட்டணிக்கு ஒட்டு போட போகிறீர்களா அல்லது, தெலங்கானா மண்ணில் பிறந்தவர்களுக்கு ஒட்டு போடா போகிறீர்களா" என ஆவேசமாக பேசினார். 

"தெலங்கானாவை அழித்த சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மற்றும் தெலங்கானா ஜன சமிதி முடிவெடுத்ததற்கு வெட்கப்பட வேண்டும். சந்திரபாபு நாயுடு தெலங்கானாவின் துரோகி. பல தெலங்கானா இளைஞர்களை என்கவுண்டர் செய்து கொன்றுள்ளார்" என்றார் சந்திரசேகர் ராவ். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close