கூட்டணியில் மாயாவதி இல்லாவிட்டால் எந்த பாதிப்பும் இல்லை - ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2018 01:31 pm

no-impact-without-mayawati-rahul-gandhi


மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாயாவதியுடன் கூட்டணி அமையாவிட்டால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாநிலங்களிலும் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக இருப்பதால், அடுத்து ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டி இருகட்சிகளுக்கிடையேயும் நிலவுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. இதனால், அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று மாயாவதி சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி பேசும்போது, மாயாவதி கூட்டணியில் இல்லாவிட்டால் காங்கிரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார். ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் போட்டியில் உள்ளன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close