மம்தா பேனர்ஜிக்கு கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி அனுப்பிய பரிசு!

  shriram   | Last Modified : 06 Oct, 2018 06:03 am

messi-gifts-his-jersey-to-mamata-banerjee

நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு, அன்பளிப்பாக தனது கால்பந்து ஜெர்சியை வழங்கி அசத்தியுள்ளார். 

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக பார்க்கப்படுபவர் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்ஸி, ஸ்பெயினின் பார்சிலோனா க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார். இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் கூட, 2 கோல்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றிருந்தார் மெஸ்ஸி. 

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு மெஸ்ஸியிடம் இருந்து ஒரு அன்பளிப்பு வந்துள்ளது. தனது பார்சிலோனா அணியின் 10ம் எண் ஜெர்சியில், 'Didi' என பெயர் பொறித்து, மம்தாவுக்கு அனுப்பியுள்ளார். மம்தாவை திதி என அவரது கட்சியினரும் தொண்டர்களும் அழைப்பதை மெஸ்ஸி அன்பளிப்பாக வழங்கி மரியாதை செய்துள்ளார். 

நட்பு கால்பந்து போட்டியில் விளையாட மெஸ்ஸி கொல்கத்தாவிற்கு 2011ம் ஆண்டு வந்திருந்தார். லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்களை கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் தனது கால்தடத்தை பதிக்க, பார்சிலோனா அணி முயர்ச்சிகள் எடுத்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் பயிற்சி பள்ளிகளை நிறுவிய பார்சிலோனா, இளம் கால்பந்து வீரர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close