• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ராஜஸ்தானில் மோடி, அமித் ஷா இன்று பிரச்சாரம்

  பாரதி கவி   | Last Modified : 06 Oct, 2018 09:42 am

modi-amit-shah-to-campaign-in-rajasthan-today

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இன்று பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் அங்கு பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

ராஜஸ்தானில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 இடங்களில் தற்போது பா.ஜ.க 160 எம்.எல்.ஏ.க்களையும், காங்கிரஸ் 25 எம்.எல்.ஏ.க்களையும் கொண்டுள்ளன. பிற இடங்களில் சிறிய கட்சியினரும், சுயேச்சைகளும் உள்ளனர்.

இந்தச் சூழலில், வருகிற டிசம்பர் மாதத்தில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, பா.ஜ.கவும், காங்கிரசும் தற்போது முதலே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. முதல்வர் வசுந்தரா ராஜே, கௌரவ யாத்ரா என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலம் முழுவதிலும் இரண்டு மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வந்தார்.

அந்தப் பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா, அஜ்மீரில் இன்று நடைபெறவிருக்கிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவும் பங்கேற்றுப் பேசவுள்ளனர். மோடியின் பிரச்சாரம் என்பது வெற்றியை நிலைநாட்ட தொண்டர்களுக்கு வழிகாட்டுவதாக அமையும் என்று பா.ஜ.க மாநில தலைவர் மதன் லால் சைனி தெரிவித்தார்.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close