மோடிக்காக தேர்தல் அறிவிப்பு நேரத்தை மாற்றுவதா? - காங்கிரஸ் கேள்வி

  பாரதி கவி   | Last Modified : 06 Oct, 2018 12:41 pm

congress-questions-ec-time-differ-of-press-meet

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்பதால் தேர்தல் அறிவிப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டதா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலன்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. தெலுங்கானா மாநிலத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக இன்று நண்பகல் 12.30 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்த தேர்தல் ஆணையம் தற்போது பிற்பகல் மூன்று மணிக்கு மாற்றியமைக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. 

அதே சமயம், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் பிரதமர் மோடி பங்குபெறும் பா.ஜ.கவின் பொதுக்கூட்டம் நண்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். ஆகவே, இந்தக் கூட்டம் கேள்விக்குறியதாக மாறிவிடும்.

இதுபோன்ற சூழல் காரணமாகத்தான் தேர்தல் தேதி அறிவிப்பு நேரத்தை தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் ஆணையத்துக்கான சுதந்திரம் எங்கே இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close