காங்கிரசுக்கு வாக்களித்தால் பா.ஜ.க பலமடையும் - கெஜ்ரிவால்

  பாரதி கவி   | Last Modified : 07 Oct, 2018 10:00 am

voting-for-congress-will-strengthen-bjp-kejiriwal

டெல்லியில் மாற்று அரசியல் சக்தியாக இருப்பது ஆம் ஆத்மி கட்சி மட்டுமே. ஆனால், மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்தால், வாக்குகள் சிதறுவதன் மூலமாக அது பா.ஜ.கவை பலமடையச் செய்வதாகவே அமையும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் டெல்லியில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த 2014ம் ஆண்டில் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.கவை வெற்றி பெறச் செய்ததைப் போன்ற தவறை மீண்டும் செய்துவிடாதீர்கள். உங்களுக்கான கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மியை பலப்படுத்துங்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில், பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றன.காங்கிரசை ஆதரிப்பதைப் போல ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் பிரசாரத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.

மக்கள் பா.ஜ.க குறித்து நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். அதே சமயம், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும் அவர்கள் வாக்களிக்க விரும்பவில்லை. டெல்லியில் உள்ள ஒரே மாற்று சக்தி ஆம் ஆத்மி கட்சி மட்டுமே என்றார் கெஜ்ரிவால்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close