• ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!
  • மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா ராஜினாமா - பா.ஜ.க. கூட்டணியில் விரிசல்

2019 தேர்தல்: போலி செய்திகளை தடுக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை!

  Newstm Desk   | Last Modified : 07 Oct, 2018 08:18 pm

facebook-creates-task-force-to-combat-fake-news-in-2019-elections

2019ல் இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, போலி செய்திகள் மற்றும் தகவல்கள் பரவுவதை தடுக்க, தனிப்படை அமைத்துள்ளது பேஸ்புக். 

சமீபத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில், போலி செய்திகள் ஒரு யுக்தியாக பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிய வந்தது. இதற்காக தனிப்படை வைத்து ஒரு வேட்பாளரை குறி வைத்து, அவரை பற்றிய தவறான செய்திகளை பரப்பிவிட்டு வரும் யுக்தி, அமெரிக்க அதிபர் தேர்தல் உட்பட உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்தது. 

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா போன்ற நிறுவனங்களை இதற்காகவே அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதில் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்திய நாடாளுமன்ற தேர்தலின் போது, போலி செய்திகளை தடுக்க பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இதற்காக வல்லுநர் குழுக்களை உருவாக்கி, தேர்தலை முன்னிட்டு பரப்பப்பட்டு வரும் தகவல்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுடனும் சேர்ந்து வல்லுநர்கள் செயல்படுவார்கள் எனவும் பேஸ்புக் நிறுவனத்தின் ஐரோப்பிய துணை தலைவர் ரிச்சர்ட் ஆலன் தெரிவித்தார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.