12 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2018 03:41 am

free-electricity-for-rajasthan-farmers

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாக, அங்குள்ள 12 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்தார். 

ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தும் தேதியை, தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன், ராஜஸ்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அஜ்மீரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பிரதமர் மோடி முன்னிலையில், வசுந்தரா ராஜே இதை அறிவித்தார். 

ராஜஸ்தானில் 12 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தின்படி பயன்பெறுவார்கள் எனவும், ஆண்டுக்கு ரூ.10000 வரை ஒரு விவசாயியின் மின் கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும், ஒவ்வொரு முறை மின்சார கட்டணத்தை செலுத்திவிட்டு, பின்னர் அரசிடம் இருந்து மாதத்திற்கு 833 ரூபாயை விவசாயிகள் தங்கள் வங்கி கணக்கிலேயே பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close