சகோதரச் சண்டை நடைபெறுகிறது: லாலு மகள் ஒப்புதல்

  பாரதி கவி   | Last Modified : 09 Oct, 2018 12:01 pm

lalu-s-daughter-admitts-fight-between-brothers

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் என்று அவர்களது சகோதரியும், லாலுவின் மகளுமான மிஸா பாரதி தெரிவித்துள்ளார்.

லாலு பிரசாத் - ராப்ரி தேவி தம்பதியருக்கு ஒன்பது பிள்ளைகள் ஆவர். அவர்களில் மூத்த மகன் தேஜ் பிரதாப், இதற்கு முன் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஆட்சி நடத்தியபோது மாநில அமைச்சராக இருந்தவர். இளைய மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தவர். தற்சமயம் இருவரும் எம்.எல்.ஏ.வாக உள்ளனர். தேஜஸ்வி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார்.

லாலுவின் மூன்றாவது பிள்ளையும், மகளுமான மிஸா பாரதி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் யார் பெரியவர் என்று தேஜ் பிரதாப் யாதவுக்கும், தேஜஸ்வி யாதவுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் அவ்வபோது தெரிவித்து வந்தனர். தற்போது அது உண்மைதான் என மிஸா பாரதி ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. எங்கள் குடும்பத்தில் சகோதரர்கள் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. எந்தவொரு குடும்பத்திலும் சகோதரர்கள் மோதல் போக்குடன் செயல்படுவது இயல்பான விஷயம்தான்’’ என்றார்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close